
வெயில் காலம் ஆரம்பிச்சாச்சு.பரிட்சை ஆரம்பிச்சாச்சு,,,அப்டினா எல்லரோட பார்வையும்
மொட்டை மாடியில தான் இருக்கும்,ஏன்னா வடகம் செஞ்சு காயப்போடனும் இல்லியா..
தேவையானவை:
ரவை -1 கிலோ
பச்ச மிளகாய் -20
சீரகம் -3 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
ஒரு பங்கு ரவைக்கு எட்டு பங்கு தண்ணீர் சேர்க்கனும்,அதோட விழுதா அரைச்ச மிளகாய்,சீரகம்,தேவையான அளாவு உப்பும் சேர்த்து கூழா அடுப்பில் வெச்சு காய்ச்சனும்,
அடுபிலிருந்து கூழை இறக்கி லேசா சூடு ஆற ஆரம்பிச்சதும் ஒரு ஸ்பூனால எடுத்து குட்டி குட்டி வில்லைகளா ஊற்றி காய வைக்கனும்,மூனு நாளுல காய்ஞ்சிடும்,நல்லா காய்ஞ்சிடுச்சினா ரெண்டு வருசம் வரைக்கும் கெடாமல் இருக்கும்,லேசான தீயில எண்னெய் விட்டு பொரிச்சி சாப்பிடா தனி டேஸ்ட் போங்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக