அடடா கலர் என்ன ,டேஸ்ட் என்ன...ஆளாளுக்கு சும்மா சாப்பிட்டு தள்ளிடுவாங்க போங்க..
ஐ! பேரை கேட்ட உடனே நாக்குல எச்சில் ஊறுதா...அப சமைச்சு சுட சுட பரிமாருனா எப்படி இருக்கும்..பிரமாதம் இல்லையா..

தேவையான பொருட்கள்:
சிக்கன் (எலும்பு இல்லாதது) -1/2 கிலோ
இஞ்சி+பூண்டு விழுது -1 டீஸ்பூன்
மிளகாய் தூள் -11/2 டீஸ்பூன் (காரம் வேணும்னு நினைக்கிறவங்க கூட கொஞ்சம் சேர்த்துக்கலாம்)
கார்ன்ஃப்ளார் மாவு -1 டீஸ்பூன்
அரிசி மாவு -1 டீஸ்பூன்
முட்டை -1
கரி மசாலா அல்லது சிக்கன் 65 மசாலா -1/4 டீஸ்பூன்
தயிர் -3 டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை நல்லா கழுவி லேசா மஞ்சள் பொடி சேர்த்து ஊற வெச்சு 10 நிமிஷம் கழிச்சு நல்லா கழுவி எடுத்துக்கனும். அதுக்கப்புறமா தயிர், வத்தல் தூள், கார்ன்ஃப்ளர் மாவு, அரிசி மாவு, முட்டை,கரம் மசாலா,தயிர்,உப்பு சேர்த்து நல்லா பிரட்டி ஒரு அரை அல்லது ஒரு மணி நேரம் ஊற வெச்சு சூடான எண்னெயில பொரிச்செடுக்கனும், அலங்கரிக்க வெங்காயத்தை வட்ட வட்டமா தட்டுல சுற்றி வைக்கலாம், லேசா கொத்த மல்லித்தழை தூவலாம். சாப்பிடும்போது எலுமிச்சையை பிழிஞ்சி விட்டுக்கலாம். இதை அப்படியே சாப்பிடலாம்.. ஆஹா!! என்ன மணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக