
தேவையான் பொருட்கள்:
முந்திரிப்பருப்பு -100 கிராம்
சீனி(சுகர்) -100 கிராம்
முட்டை -3
செய்முறை:
முந்திரியையும்,சீனியையும் தனித்ததனியா மிக்சியில போட்டு நைசா பொடிச்சுக்கனும்.
முட்டையை உடைச்சு வெள்ளைக்கருவை மட்டும் ஒரு கிண்ணத்துல எடுத்து நல்லா நுரைக்க அடிச்சுக்கனும்.
முந்திரிப்பொடி,சீனிப்பொடியையும் முட்டை வெள்ளைக்கருவோட சேர்த்து நல்லா கலந்து அடிச்சுக்கனும். அது கெட்டி கலவையாகுற வரைக்கும் அடிக்கனும். பாத்திரத்தை கீழே சாய்ச்சாலும் கூட விழக்கூடாது, அம்புட்டு கெட்டியாகனும்.
நல்லா கெட்டியாகி இறுக ஆரம்பிச்சதும் சின்ன சின்ன கோன்,இல்லாட்டி கிண்ணத்துல கலவையை நிரப்பி கேக் அவன்'ல பத்து நிமிஷத்துக்கு பேக் பண்ணனும்.
கேக் அவன் இல்லாதவங்க இட்லி பாத்திரத்துல மணல் நிரப்பி மணல் சூடு வந்ததும் மக்ரூன் கலவையை ஒரு ஸ்பூனால ஒரு தட்டுல வட்ட வட்டமா விட்டு மணல் மேல வெச்சு மூடி வேக வைக்கனும்.இப்ப மக்ரூன் ரெடி..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக