
சின்ன வயசுல நானெல்லாம் பள்ளிக்கூடத்துல படிக்கும் போது நாவல்பழ சீஸன்ல அந்த மரத்துக்கு கீழேயே பசங்களோட எப்படா மரத்துல இருந்து பழம் விழும்னு காத்திட்டே இருப்போம்.காத்தடிச்சிடுச்சுனா அவ்வளவு தான் அடேயப்பா..என்னா அடிபுடி சண்டை,,இப்ப இந்த நாவல்பழத்துல தான் இப்ப நாம ஜூச் செய்யப்போறோம்.
தேவையான பொருட்கள்:
கொட்டை நீக்கின நாவல்பழம் 50 கிராம்
குளிர்ச்சியான தண்ணீர் 1 டம்ளர்
உப்பு 1 சிட்டிகை
சர்க்கரை 1 ஸ்பூன்
செய்முறை:
நாவல் பழம்,தண்ணீர்,உப்பு,சர்க்கரையை எல்லாத்தையும் மிக்சியில போட்டு நல்லா அரைச்சி பழரசமாக்கி குடிக்க வேண்டியது தான்..அடடா என்னா ஒரு சுவௌப்பா..ட்ரை பண்ணி பாருங்கப்பூ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக