திங்கள், 15 மார்ச், 2010

வெள்ள‌ரிக்காய் வெஜிட‌பிள் சால‌ட்

சால‌ட் எப்ப‌வுமே உட‌ம்புல‌ கொழுப்பு சேராம‌ பார்த்துக்கும்,,இப்ப‌ வெயில் கால‌ம் ஆர‌ம்பிச்சாச்சுல‌.வெள்ள‌ரி சீச‌னும் ஆர‌ம்பிச்சாச்சு..உட‌லுக்கு குளிர்ச்சியான‌து ,,இதை குட்டி ப‌ச‌ங்க‌ள‌ள‌ இருந்து பெரிய‌வ‌ங்க‌ வ‌ரைக்கும் சாப்பிட‌லாம்..த‌யாரிக்க‌ ஆர‌ம்பிக்க‌லாமா.




தேவையான‌ பொருட்க‌ள்:

வெள்ள‌ரிக்காய் - 50 கிராம்
த‌க்காளி - 50 கிராம்
வெங்காய‌ம் - 50 கிராம் (பொடியா ந‌றுக்கின‌து)
மாங்காய் - 10 கிராம் (பொடியா ந‌றுக்கின‌து)
கேர‌ட் - 50 கிராம்
முள்ள‌ங்கி - 20 கிராம்
புதினா - 10 கிராம்
கொத்த‌ம‌ல்லித் த‌ழை - 10 கிராம்
மிள‌குத்தூள் - 1 ஸ்பூன்
க‌ருப்பு உப்பு - தேவையான‌ அள‌வு
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
ப‌ச்சை மிள‌காய் - 3


செய்முறை:

வெள்ள‌ரிக்காய்,கேர‌ட்,முள்ள‌ங்கி எல்லாத்தையும் ந‌ல்லா க‌ழுவி மேல் தோலை சீவி சின்ன‌ சின்ன‌ துண்டா ந‌றுக்கிக்க‌னும்.

புதினா,கொத்த‌ம‌ல்லி,ப‌ச்சை மிள‌காய் எல்ல‌த்தையும் எலுமிச்சைசாறுல‌ அரைச்சி ப‌சை மாதிரி ஆக்கிக்க‌னும்.

வெங்காய‌ம்,ப‌ச்ச‌ரிசி,மாங்காய் கூட‌ வெள்ள‌ரிக்காய்,கேர‌ட்,முள்ள‌ங்கியையும் சேர்த்து ந‌ல்லா குலுக்கிக்க‌னும்.அதுல‌ புதினா ,கொத்த‌ம‌ல்லி,ப‌ச்ச‌மிள‌காய் ப‌சையை சேர்த்து காய்க‌றிக‌ளை ந‌ல்லா குலுக்கிக்க‌னும்,இதை ஃப்ரிட்ஜுக்குள்ள‌ வெச்சுக்க‌லாம்.

ப‌ரிமார‌க்கூடிய‌ ச‌ம‌ய‌த்துல‌ தேவையான‌ க‌ருப்பு உப்பையும்,மிள‌குத்தூளையும் தூவி கொடுத்தா செமையா இருக்கும்,மாங்காய் இல்லாம‌லும் இந்த‌ சால‌ட்ட‌ செய்ய‌லாம்.ச‌ம‌ய‌த்துல‌ ச‌ப்பாத்திக்கு,சாத‌த்துக்குக்கூட‌ தொட்டுக்க‌ இந்த‌ வெள்ள‌ரிக்காய் வெஜிட‌பிள் சால‌ட் உத‌வும்,,வீட்டுல‌ எல்லாருக்கும் செஞ்சு கொடுங்க‌..ச‌ரியா..

4 கருத்துகள்:

dhamayanthi சொன்னது…

hey kitchen queen..unga kaiki thanga moothiram poodanum

kitchen Queen சொன்னது…

எக்கா!! ரொம்ப‌ டாங்ஸ்ங்கோ..த‌ங்க‌ மோதிர‌ம் வேணாம்..ஒரு பிளாட்டின‌ வ‌ளைய‌ல் அதுவும் வைர‌ம் ப‌திச்ச‌துனா ச‌ந்தோச‌மா இருக்கும்..

thirukkannapurathaan சொன்னது…

immmm padikka nallaththaan irukku... yaar pannikoduppa?

kitchen Queen சொன்னது…

முத‌ல்ல‌ நீங்க‌ என்னோட‌ ப்ளாக்கை பார்வையிட்டு க‌ருத்து தெரிவிச்ச‌துக்கு ந‌ன்றி..யார் ச‌ம‌ச்சி கொடுப்பாங்க‌ன்னு கேட்டா நான் என்ன‌ சொல்ல‌முடியும்,,அம்மாகிட்ட‌ சொல்லுங்க‌..

கருத்துரையிடுக