புதன், 27 ஜனவரி, 2010

சித்திரைத் திருநாள் ச‌மைய‌ல்



2000 வ‌ருச‌ங்க‌ளுக்கும் குறைவில்லாம த‌மிழ் மாத‌ங்க‌ள் வழக்கத்தில இருந்துட்டு தான் இருக்கு.

சித்திரையின் சிறப்பு:

சித்திரையில‌ தான் மல்லிகைப்பூவும், முல்லைப்பூவும் ம‌ல‌ருது. மாம்பழமும், பலாவும் இந்த‌ மாத‌த்துல‌ தான் அதிக‌மா கிடைக்கும்.

இந்த மாச‌த்துல‌ தான் வேப்ப மரம் பூக்கும். சங்க காலத்தில் வேப்பம்பூ பூக்குற‌ காலத்தை முகூர்த்த‌ நாளுக்கு ச‌ரியான‌ காலமாக கொண்டாடிருக்காங்க‌,

சித்திரை வழிபாடு:



த‌மிழ‌ரா பிற‌ந்த‌ ஒவ்வொருத்த‌ரும் சித்திரைத் திருநாள கொண்டாடியே ஆக‌னும்.சித்திரை வருஷ‌ப் பிறப்பு அன்னிக்கு அதிகாலையில க‌ண் முழிச்சு வீட்டுல‌ இருக்க‌ற‌ சாமி ப‌ட‌ங்க‌ளுக்கு பூ மாலை சாத்த‌னும்,அப்புற‌மா சாமிப்ப‌ட‌த்துக்கு முன்னால‌ மனைப் பலகை அல்லது வாழை இலை போட்டு புதுப் பஞ்சாங்கத்தை வைக்க‌னும். பஞ்சாங்கத்திற்குப் பதிலா விக்ருதி வருஷ‌ காலண்டரை கூட‌ வெக்க‌லாம்.

மனைப் பலகைக்கு முன்னால‌ இன்னொரு வாழை இலையில சித்திரை மாத‌ அவல் , சர்க்கரைப் பொங்கல், பாயசம், வெண்பொங்கல், வடை அப்புற‌ம் மனசுக்குப் பிடிச்ச‌ இனிப்பு ப‌ல‌கார‌ங்க‌ள‌ ப‌டைக்க‌னும். விளக்கு ஏற்றி அலங்காரம் செஞ்சு தீப‌,தூப‌ம் காட்டி தேங்காய் உடைச்சி சாப்பாட்டு வகைகளை நிவேதனம் செஞ்சி சாமி கும்பிட‌னும்.சாமி கும்பிடும்போது சுலோகம் , தேவாரம் , திவ்ய பிரபந்தம் , விநாயகர் அகவல் இப்ப‌டி ப‌ட்ட‌ தோத்திரங்கள் சொல்லி வ‌ழிப‌ட‌லாம். அப்புற‌ம் முதல்ல‌ கணபதியை வணங்கி ' சுப ஸ்ரீ விக்ருதி வருஷம்'னு சொல்லி மாச‌ப்பிற‌ப்பை "சித்திரை'னு சொல்ல‌னும்.


ப‌ஞ்சாங்க‌ம்னா திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் இப்ப‌டி ஐந்தும் சேர்ந்த‌து தான்.

1.திதி – ச‌ந்திர‌னோட‌ க‌லைக‌ள்.

2.வாரம் – வார‌ கிழ‌மைக‌ள்.

3.நட்சத்திரம் – காலையில‌ சூரிய உதயம் எந்த நட்சத்திரத்தில வ‌ந்த‌து.

4.கரணம், யோகம் – இது இரண்டும் குறிப்பிட்ட கால அளவுகளோட‌ பேர்க‌ள் தான்.சாஸ்திரம் நல்லா அறிஞ்ச‌வ‌ங்க‌ இதை சரியாகணக்கிட முடியும்.

5."வாரத்தைச் சொல்ற‌தால‌ ஆயுள் வளரும்; திதியைச் சொல்ற‌தால ஐஸ்வர்யம் கிடைக்கும்; நட்சத்திரத்தை உச்சரிக்க‌றதால பாவங்கள் நீங்கும்;

6.யோகத்தைக் சொல்ற‌தால‌ நோய் குணமாகும்; கரணத்தைச் சொல்ற‌தால‌ நின‌ச்ச‌ காரியம் நடக்கும்"னு சாஸ்திரம் சொல்லுது.

பிறகு எல்லா தெய்வங்களையும் வேண்டி " இந்த விக்ருதி வருச‌ம் எல்லா உயிர்களுக்கும் நன்மையைத் தர அருள் செய்"னு சாமிக்கிட்ட‌ ந‌ல்லா பிரார்த்த‌னை ப‌ண்ணிட்டு விபூதி அல்லது குங்குமத்தை ப‌க்தியோட‌ நெற்றியில‌ பூசிட்டு கற்பூர ஆரத்தி காட்டி வழிபாட்ட முடிச்சுனும்.
வீட்டுல‌ சாமி கும்பிட்ட‌ பிற‌கு கோயிலுக்குப்போய் சாமி கும்பிட‌லாம்.

சித்திரை திருநாளுக்கு அவல் , வேப்பம் பூ பச்சடி மாதிரியான‌ உணவு வகைகளைச் செய்து சாமிக்கு படைச்சு நாம‌ளும் சாப்பிட்டு ச‌ந்தோச‌மா இருக்க‌னும்..


சித்திரை அவல்:
சித்திர‌த் திருநாள் அன்னிக்கு அவல், வெல்லம், நெய் கலந்த இனிப்பு செய்வாங்க‌. வருச‌ம் முழுசும் சந்தோஷம் ம‌ட்டுமே வ‌ர‌னும் என்ப‌த‌ற்காக இந்த சித்திரை அவலை க‌ட‌வுளுக்கு ப‌டைக்கிறோம்.

வேப்பம்பூ பச்சடி:

சித்திரைத்திருநாள் அன்னிக்கு ப‌டைக்க‌ப்ப‌ட‌ற‌ விசேஷ ச‌மைய‌ல்னா அது வேப்பம்பூ பச்சடி தான்ம். ஏன்னா கார‌ணம் இருக்கு,இன்பமும் துன்பமும் சேர்ந்த‌ மேடு பள்ளம் நிறைந்தது தான் நம்மோட‌ வாழ்க்கை . இந்த நிலையில்லாத‌ வாழ்க்கையில இன்பத்தை மட்டுமே நினைச்சு ம‌ற்ற‌வ‌ங்க‌ளுக்கு துன்ப‌ம் செய்ய‌கூடாது அப்ப‌டிங்குற‌தையும்,இன்ப‌ம் வ‌ந்தாலும் துன்ப‌ம் வ‌ந்தாலும் ச‌ங்க‌ட‌ப்ப‌டாம எல்லாத்தையும் ச‌ம‌மா எடுத்து வாழ‌ ப‌ழ‌கிக்க‌னும்ங்குற‌துக்காக‌த் தான் இந்த‌ வேப்ப‌ம் பூ ப‌ச்ச‌டி.

தேவையான பொருட்க‌ள்:

மாங்காய் -2
வெல்லம் -கோலி குண்டு அள‌வு
தேங்காய் – கால் மூடி
புளி – எலுமிச்சை அள‌வு
உப்பு -தேவையான அளவு
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன் (ஊற‌ வெச்ச‌து)
ஏலப்பொடி – 1 சிட்டிகை
பச்சைமிளகாய்- 2
மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய்- 2 ஸ்பூன்
க‌டுகு -1 சிட்டிகை,

செய்முறை:

மாங்காயை தோல் சீவிட்டு ஊறுகாய்க்கு துருவுற‌து மாதிரியோ,அல்ல‌து மிக்ஸியில‌ தூளாக்கி வெச்சுக்க‌னும்.வெல்லத்தை பொடியாக்கி ஏலம் சேர்த்து, கொஞ்ச‌மா த‌ண்ணீர் சேர்த்து கரைச்சு அடி கனமான வாணலியில் லேசான‌ பாகா காய்ச்சிக்க‌னும். பாகை ஸ்பூனால் ஊற்றினால் ஊற்ற வ‌ர‌னும்.அதை அப்ப‌டியே இற‌க்கி ஆற‌ வைக்க‌னும், இன்னொரு ப‌க்க‌ம் கொஞ்ச‌மா த‌ண்ணீர் விட்டு க‌ட‌ல‌ப்ப‌ருப்பை வேக‌ வைக்க‌னும்,முக்கால் அள‌வு வேக‌ ஆர‌ம்பிச்ச‌தும் அரைச்ச‌ அல்ல‌து துருவின‌ மாங்காய்,அதோட‌ ந‌றுக்கி வெச்சிருக்க‌ற‌ தேங்காயையும் சேர்த்து த‌ண்ணீர் வ‌த்துற‌ வ‌ரைக்கும் க‌ருகாம‌ வ‌த‌க்க‌னும்,

இன்னொரு வாணலியில ரெண்டு ஸ்பூன் ந‌ல்லெண்ணெயில‌ க‌டுகு தாளிச்சு, வேப்பம் பூவை கசப்பு வாசனை வ‌ருகிற‌ வ‌ரைக்கும் ந‌ல்லா வ‌றுத்துக்க‌னும்.. வேப்பம் பூ நல்லா வறுபடும் போது த‌னியா எடுத்து அப்படியே வெல்லப்பாகுல‌ ‌ மாங்காய், தேங்காய், வேப்பம்பூ கலவையை சேர்த்த‌தும், இரண்டு நிமிச‌ம் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்துச்சுட‌னும் . அதோட‌ வெல்ல‌ப்பாகை சேர்க்க‌னும்.ரொம்ப‌ நேரம் வெல்லத்தை கிளறிட்டிருக்காம‌, தண்ணீர் சுண்டுன‌தும் அடுப்பை சிம்'ல் வெச்சுட்டு உப்பு, மிளகாய்ப் பொடி , வேப்பம் பூ எல்லாத்தையும் போட்டு ஒரு தரம் திருப்பி விட்டு வாணலியை இறக்கிட‌னும்.

குறிப்பு: வெல்லப் பாகு லேசா கொஞ்சம் ஆறினதும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு திருப்பினால், நெய்யிலேயே செய்தா மாதிரி இருக்கும்.

மலபார் பழ பால் பாயசம்:


தேவையான பொருட்கள்:

பால் - 1லிட்டர்
வாழைப்பழம் -4
சாதம் -அரை க‌ப்
முந்திரி பருப்பு- 10
ஏலக்காய் -1 சிட்டிகை
நெய் -50 கிராம்
சர்க்கரை -1 ட‌ம்ள‌ர்

செய்முறை:

பாலை அடுப்பில வெச்சு பொங்கி வ‌ருகிற‌ வரைக்கும் சூடு ப‌ண்ணி இறக்கி வெச்சுக்க‌னும் . அப்புற‌மா சாதத்தை கொதிக்கிற‌ பால் பாத்திர‌த்துல‌ போட்டு சூடு ப‌ண்ண‌னும். கொஞ்ச‌ம் கொதிக்க‌ ஆர‌ம்பிச்ச‌ உட‌னே அதுல‌ சர்க்கரையை சேர்த்து ந‌ல்லா கிண்டி விட‌னும்,அடுப்பு சிம்'ல‌ தான் இருக்க‌னும்.

நெய்யில முந்திரிப் பருப்பை போட்டு வறுத்து வெச்சு எடுத்து வெச்சுக்க‌னும், ஏலக்காயை பொடி செஞ்சுக்க‌னும்.பாலும் சாதமும் நல்லா க‌ல‌க்குற‌ வ‌ரைக்கு கொதிக்க‌ விட‌னும்.அதுக்க‌ப்புற‌மா பால் சாத‌க் க‌ல‌வையை இற‌க்கி வெச்சு முந்திரிப் பருப்பையும் ஏலக்காயையும் போட்டு கலக்கனும்.

வாழைப்பழத்தை ரொம்ப‌ சின்ன‌ சின்ன‌தா வெட்டி பால்,சாத‌ம் க‌ல‌வையோட‌ சேக்க‌னும் இப்ப‌ மலபார் பழ பால் பாயசம் ரெடி.

குறிப்பு: உங்கள் விருப்பம் போல எந்த‌ ப‌ழ‌த்தையும் சேர்த்து பாயாச‌ம் செய்ய‌லாம்.

வெள்ளி, 22 ஜனவரி, 2010

அவ‌ல் பாயாச‌ம்


அவ‌ல் எல்லாருக்குமே பிடிச்ச‌ ஒண்ணு.சித்திரை முத‌ல் நாளுல‌ அவ‌லோட‌ வெல்ல‌ம் வாழைப்ப‌ழ‌ம் எல்லாம் சேர்த்து சாமிக்கு வெச்சி கும்பிடுவோம்.இந்த‌ அவ‌ல்ல‌ உப்புமா,பாயாச‌ம் எல்லாம் ப‌ன்ண‌லாம்,இப்ப‌ அவ‌ல் பாயாச‌ம் எப்ப‌டி ப‌ன்ண‌லாம்னு பாக்க‌லாமா.


தேவை :

அவ‌ல்- 1 க‌ப்

ஏல‌க்காய்- 2

பால் -1 1/2 க‌ப்

ப‌ச்ச‌ க‌ற்பூர‌ம்- சிறிது

வெல்ல‌ம் அல்ல‌து சீனி- 1க‌ப்

முந்திரி,திராட்சை -10

நெய் -2 ஸ்பூன்

செய்முறை :

         அவ‌லை வ‌றுத்து ஒண்ணு ரெண்டா பொடிச்சுக்க‌னும்.லேசான‌ தீயில‌ அடுப்பில் ஒரு பாத்திர‌ம் வெச்சு பால‌ காய்ச்சனும்,பால் ந‌ல்ல‌ கொதிச்ச‌தும் அஹ்ட்தோட‌ அவ‌லை கொட்டி வேக‌ வைக்க‌னும்,அத்தோட‌ ஏல‌க்காய் பொடி,ப‌ச்ச‌ க‌ற்பூர‌த்த‌ க‌ரைச்சி ஊத்த‌னும்.1/4 க‌ப் த‌ண்ணீருல‌ சீனி அல்ல‌து வெல்ல‌த்தை க‌ரைச்சி பாகாக்கி அவ‌ல்ல‌ சேர்த்துக்க‌னும்.ந‌ல்லா கிண்டி விட‌னும்,அடி பிடிச்சிட‌ கூடாது.இப்ப‌ வ‌றுத்த‌ முந்திரி,திராட்சையை அவ‌ல் க‌ல‌வைல‌ சேர்க்க‌னும்.ந‌ல்லா கொதிச்சி வ‌ந்த‌தும் நெய்யை சேர்த்து இற‌க்க‌னும்.இப்ப‌ அவ‌ல் பாயாச‌ம் ரெடிங்கோ.

பூண்டு ஊறுகாய்

ஊறுகாய் இந்த‌ வார்த்தைய‌ கேட்ட‌வுட‌னே ந‌ம்மை கேக்காம‌லே நாக்குல‌ தானா எச்சில் ஊறுது.இப்ப‌ நாம‌ கொஞ்ச‌ம் வித்யாச‌மா பூண்டு ஊறுகாய் ப‌ண்ணி பாக்க‌லாமா..



தேவையான‌து:

பூண்டு 1 க‌ப்

ந‌ல்லெண்ணெய் 50 மில்லி

எலுமிச்சை சாறு 1/2 க‌ப்

வெந்தய‌ம் 1ஸ்பூன்

சீர‌க‌ம் 1 ஸ்பூன்

ம‌ல்லி 2 ஸ்பூன்

வ‌த்த‌ல் 12

உப்பு தேவைக்கு

காய‌ப்பொடி 1/2 ஸ்பூன்

செய்முறை:

      பூண்டை 2,ரெண்டா ந‌றுக்கிக்க‌னும்.எலுமிச்சை சாறோட‌ கொஞ்ச‌ம் க‌ல் உப்பு சேர்த்து வ‌டி க‌ட்டிக்க‌னும்.வெந்த‌ய‌ம்,சீர‌க‌ம்,ம‌ல்லி,வ‌த்த‌ல் எல்லாம் சேர்த்து வெறும் வாணலியில‌ வ‌றுத்து பொடியாக்க‌னும். இப்ப‌ வாண‌லியில‌ 50 ந‌ல்லெண்ணெய‌ ஊற்றி அதுல‌ க‌டுகு,காய‌ப்பொடி செர்த்துட்டு அத்தோட‌ ந‌றுக்கின‌ பூண்டை சேர்த்து ந‌ல்லா வ‌த‌க்க‌னும்.இப்ப‌ வ‌றுத்து பொடியாக்கின‌ ம‌சாலா பொடிய‌ சேர்த்து ந‌ல்லா குறைஞ்ச‌ தீயில‌ கிள‌றி விட‌னும்.க‌டைசியா கொஞ்ச‌மா வெல்ல‌ம் சேர்த்து இற‌க்கிட‌ வேண்டிய‌து தான்.இப்ப‌ பூண்டு ஊறுகாய் ரெடி..

வியாழன், 21 ஜனவரி, 2010

ஆட்டுக்கால் பாயா








தேவையான‌வை:

ஆட்டுக்கால்- 2


 கேர‌ட் -1

பீன்ஸ் -4

கோஸ் இலை- 1கைப்பிடி

த‌க்காளி- 2

இஞ்சி+பூண்டு விழுது- 1 ஸ்பூன்

ப‌ல்லாரி -1

க‌ருவேப்பிலை-‍ ‍கொஞ்ச‌ம்

மிள‌குத்தூள் -11/2 ஸ்பூன்

சீர‌க‌த்தூள் -1 ஸ்பூன்

ம‌ஞ்ச‌ள் தூள்- 1/2 ஸ்பூன்

ப‌ட்டை -2

கிராம்பு -2

ஏல‌க்காய்- 2

முந்திரி,பாதாம்- 10

தேங்காய் துறுவ‌ல்- 1/2 க‌ப்

செய்முறை :

      கேர‌ட்,பீன்ஸ்,கோஸ் இலையை ந‌றுக்கிக்க‌னும்.ஆட்டுக்காலை நால்ல‌ சுத்த‌ம் செஞ்சி வெட்டி எடுத்து குக்க‌ர்ல‌ 3 விசில் வெச்சு வேக‌ வைக்க‌னும்.அப்புற‌மா ந‌றுக்கின‌ காய்க‌ளோட‌, ப‌ல்லாரி,த‌க்காளி கொஞ்ச‌ம் உப்பு சேர்த்து 1 விசில் வெச்சு ந‌ல்லா வேக‌ வைக்க‌னும்.. ‌பாதாம் ,முந்திரி ,மிள‌குத்தூள் ,ம‌ஞ்ச‌ள் தூள் ,சீர‌க‌த்தூள் ,உப்பு ,தேங்காய் சேர்த்து ந‌ல்லா அரைச்சு வெச்சுக்க‌னும்.


       இப்ப‌ லேசான‌ தீயில‌ குக்க‌ர‌ வெச்சு அதுல‌ எண்ணெய் விட்டு காய்ஞ்ச‌தும் க‌ருவேப்பிலை இஞ்சி+பூண்டு விழுது சேர்த்து ந‌ல்லா வ‌த‌க்க‌னும்,இப்ப‌ அத்தோட‌ ப‌ட்டை,கிராம்பு,ஏல‌க்காய் சேர்த்து ந‌ல்லா கிள‌ர‌னும்.ப‌ச்சை வாச‌ம் போன‌தும் அரைச்சு வெச்சிருக்க‌ர‌ க‌ல‌வைய(பாதாம்,முந்திரி,மிள‌குத்தூள்,ம‌ஞ்ச‌ள் தூள்,சீர‌க‌த்தூள்,உப்பு,தேங்காய்)எல்லாம் சேர்த்து ந‌ல்லா கிள‌ர‌னும்,இப்ப‌ வேக‌ வெச்சு எடுத்த‌ ஆட்டுக்கால்,காய் க‌ல‌வைய‌ சேர்த்துக்க‌னும்,வேணும்னா கொஞ்ச‌ம் த‌ன்ணி க‌ல‌ந்துக்க‌லாம்,த‌ள‌ த‌ள‌ன்னு கொதிச்சி வ‌ர்ர‌ நேர‌த்துல‌ இற‌க்கி வெச்சுக்க‌னும்,இது தான் ஆட்டுக்கால் பாயா.க‌டைசியா ந‌றுக்கின‌ ம‌ல்லித்தழை சேர்த்து இற‌க்கி சுட‌ சுட‌ இடியாப்ப‌த்துல‌ ஊத்தி மூக்கு முட்ட‌ சாப்பிட‌லாம்..



புதினா ப‌ரோட்டா


எப்ப‌வுமே புதினா உட‌ம்புக்கு ந‌ல்ல‌துனு சொல்லுவாங்க‌,அத‌னால‌ தான் புதினா துவைய‌ல் அர‌ச்சி நாம‌ சாப்பிடுவொம்.ஆனா சில‌ பேருக்கு,குழ‌ந்தைக‌ளுக்கு பிடிக்காது.அதுக்காக‌த்தான் ந‌ம்ம‌ புதினா ப‌ரோட்டா,,செஞ்சி பாத்துடுவோமா,வாங்க‌.
தேவையான‌வை:
கோதுமை மாவு -100 கிராம்
மைதா மாவு -100 கிராம்
க‌ட‌லை மாவு -100 கிராம்
பொடித்த‌ ர‌வை -50 கிராம்
ந‌றுக்கின‌ புதினா- ஒரு கைப்பிடி
வேக‌ வெச்ச‌ சேப்ப‌ங்கிழ‌ங்கு (தேவைப்ப‌ட்டால்)- 1 க‌ப்
ஓம‌ப்பொடி -1 ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
வ‌த்த‌ல் தூள்- 1ஸ்பூன்
எண்ணெய் -50 மில்லி
ரீஃபைன்ட் ஆயில்,த‌யிர் மாவு பிசைய‌ -1ஸ்பூன்
செய்முறை :
மைதா,கோதுமை மாவு,ர‌வை க‌ட‌லை மாவு எல்லாத்தையும் உப்பு,வ‌த்த‌ல் பொடி சேர்த்து ச‌லிச்சி வெச்சிக்க‌னும்,இந்த‌ மாவு க‌ல‌வையோட‌ கொஞ்ச‌ம் எண்ணெய், த‌யிர், புதினா இலை,சேப்ப‌ங்கிழ‌ங்கு ,ஓம‌ப்பொடி சேர்த்து மிருதுவா ச‌ப்பாத்தி மாவு ப‌தத்துக்கு பிசைய‌னும்.ஒரு அரை ம‌ணி நேர‌ம் மாவை ஊற‌ வெக்க‌னும்,இப்ப‌ மாவை உருண்டைக‌ளாக்கி முக்கோண‌ ப‌ரோட்டா செஞ்சி தோசைக்க‌லை சூடாக்கி என்ணெய் அல்ல‌து நெய் விட்டு பொன்னிற‌மாகுற‌ வ‌ரை வேக‌ விட‌னும்..ந‌லா மிருதுவாக‌வும்,வித்த்டியாஅமான‌ டேஸ்டாக‌வும் இருக்கும்,
குறிப்பு: ச‌ப்பாத்தி மிருதுவா இருக்க‌ சூடான‌ த‌ண்ணீர் அல்ல‌து பால் விட்டு மாவு பிசைய‌லாம்.

தேங்காய் பூர‌ண‌ ர‌வை உருண்டை


தேங்காய் இல்லாம‌ ந‌ம்மூருல‌ ச‌மைய‌லே இருக்காது,அதுவும்,க‌ன்னியாகும‌ரி மாவ‌ட்ட‌ம்,கேர‌ளா ப‌குதிக‌ள்ள‌ தேங்காய் இல்லாம‌ ச‌மைய‌ல‌ நின‌ச்சிக்கூட‌ பாக்க‌ முடியாது..இப்ப‌ நாம‌ ஒரு இனிப்பு ப‌ல‌காரம் எப்ப‌டி செய்ய‌லாமுனு பாப்போமா..
தேவையான‌து:
பொடிச்ச‌ ர‌வை 2 க‌ப்
துருவின‌ தேங்காய் 1 க‌ப்
சீனி 150 கிராம்
ஏல‌க்காய் பொடி 1/2 ஸ்பூன்
திராட்சை 10
பாதாம் 10
உப்பு 1 சிட்டிகை
ரீஃபைன்ட் ஆயில் பொரிக்க‌
செய்முறை:
தேங்காய் பூர‌ண‌ம்:
துறுவின‌ தேங்காய‌ வாணலியில‌ கொட்டி ஈர‌ப்ப‌சை சுண்டுற‌ வ‌ரைக்கும் ந‌ல்லா வ‌த‌க்க‌னும்,தேங்காய் சிவ‌க்க‌ ஆர‌ம்பிச்ச‌தும் அதுல‌ மிக்ஸியில‌ அர‌ச்ச‌ ஏல‌க்காய் சீனிக்க‌ல‌வைய‌ சேர்க்க‌னும்.சீனி தேங்காயோட‌ ந‌ல்ல‌ ஒட்டின‌தும் அதுல‌ பாதாம்,திராட்சைய‌ சேர்த்து ஆற‌ வெக்க‌னும்.
ர‌வா உருண்டை:
இப்ப‌ அடுப்புல‌ ஒரு அடி க‌ன‌மான‌ பாத்திர‌த்துல‌ 5 க‌ப் த‌ண்ணீர் ஊர்றி அதுல‌ ஒரு சிட்டிகை உப்பு,மீதி இருக்க‌ற‌ சீனியையும் சேர்த்து கொதிக்க‌ விட‌னும்.ந‌ல்லா கொதிச்ச‌தும் ர‌வைய‌ கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா சேர்க்க‌னும்,க‌ர‌ண்டியால‌ ந‌ல்லா கிள‌றி விட்டுக்கிட்டே இருக்க‌னும்,அடி பிடிச்சிட‌ கூடாது,கெட்டியாகாம‌ இருக்க‌ அடுப்ப‌ சிம் ல‌ வெச்சிக்க‌னும்,பிற‌கு அடுப்பை அண‌ச்சிட்டு ர‌வை க‌ல‌வைய‌ லேசான‌ சூட்டோட‌ உருண்டையா செஞ்சிக்க‌னும்,அந்த‌ ர‌வா உருண்டைல‌ லேசா குழி செஞ்சி அதுல‌ தேங்காய் பூர‌ண‌த்த‌ ந‌டுவில‌ வெச்சி ந‌ல்லா மூடி வெச்சி உருட்ட‌னும்,
இப்ப‌ வாண‌லியில‌ என்ணெய் ஊற்றி சூடான‌தும் த‌யாரிச்சி வெச்சிருக‌ற‌ ர‌வா உருண்டைக‌ள‌ எண்ணெயில‌ போட்டு பொன்னிற‌மா பொரிச்செடுக்க‌னும்,அவ்வ‌ள‌வு தான்.இந்த‌ தேங்காய் பூர‌ண‌ ர‌வை உருண்டை ரொம்ப‌ டேஸ்டா இருக்கும்,ட்ரை ப‌ண்ணி பாருங்க‌..

புதன், 20 ஜனவரி, 2010

எலுமிச்சை சாத‌ம்


ஊருக்கு கிள‌ம்பினா ந‌ம்மூருல‌ எல்லாம் எலுமிச்சை சாத‌ம்,புளி சாத‌ம் க‌ட்டி தான் கொண்டு போவாங்க‌..இப்ப‌ கால‌மே மாறிப்போச்சு,அப்ப‌ப்ப‌ வாங்கி சாப்பிட‌றாங்க‌.ஆனாலும் அவச‌ர‌த்துக்கு எப்ப‌வும் உத‌வுற‌து இந்த‌ த‌யிர் சாத‌ம்,எலுமிச்சை சாத‌ம் தான்..ச‌ரி இப்ப‌ எலுமிசை சாத‌ம் எப்ப‌டி செய்ய‌லாம்னு பாக்க‌லாமா..

தேவை:
அரிசி - 1 க‌ப்
உளுத்த‌ம்ப‌ருப்பு -1 ஸ்பூன்
க‌ட‌லைப்ப‌ருப்பு -1 பெரிய‌ ஸ்பூன் அள‌வு
வ‌த்த‌ல் -2
ப‌ச்சை மிள‌காய்- 2 (கீறுன‌து)
எலுமிச்சை சாறு- 1 பெரிய‌ ஸ்பூன் அள‌வு
க‌டுகு,காய‌ப்பொடி -1 சிட்டிகை
சாம்பார் ம‌சாலா (விருப்ப‌ம் இருந்தால்)-1 ஸ்பூன்
வேர் க‌ட‌லை -10
ரீஃபைன்ட் ஆயில்- 2 ஸ்பூன்
க‌ருவேப்பிலை -சிறிது
உப்பு- தேவைக்கு
செய்முறை:
அரிசிய‌ க‌ழுவி 1/2 ம‌ணி நேர‌ம் ஊற‌ வெச்சி சாத‌மா ப‌ண்ணி வெச்சிக்க‌னும்.இப்ப‌ ந‌ல்லா ஆற‌வெக்க‌னும்,வாண‌லியில‌ எண்ணெய் சூடாக்கி அதுல‌ காய‌ப்பொடி,க‌டுகு தாளிச்சி அதுல‌ க‌ட‌ல‌ப்ப‌ருப்பு,உளுத்த‌ம்ப‌ருப்பு, வேர்க‌ட‌லை சேர்த்து பொன்னிற‌மா மாறிய‌தும்,க‌ருவேப்பிலை,வ‌த்த‌ல்,ப‌ச்ச‌ மிள‌காய்,உப்பு,ம‌ஞ்ச‌ள் பொடி சேர்த்து கிள‌ற‌னும்,பிற‌கு அதுல‌ ஆற‌ வெச்ச‌ சாத‌த்த‌ கொட்டி லேசா கிள‌ற‌னும்.விரும்பினா சாம்பார் பொடி சேர்த்துக்க‌லாம்.ஏன்னா இத‌னால‌ த‌னி டேஸ்ட் கிடைக்கும்.இப்ப‌ எலுமிசை சாற‌ சேர்க்க‌னும்.இதைக்கூட‌ குற‌ச்ச‌லாவோ,கூடுத‌லாவோ சேர்த்துக்க‌லாம்.இப்ப‌ சாத‌த்தை கிள‌றினா எலுமிச்சை சாத‌ம் ரெடி.ஆற‌ வெச்சி ட‌ப்பாவுல‌ எடுத்துட்டு போக‌லாம்,இது 20 - 22 ம‌ணி நேர‌ம் வ‌ர‌ கெட்டுப்போகாம‌ இருக்கும்..டீக்கே..

செவ்வாய், 19 ஜனவரி, 2010

உருளைக்கிழ‌ங்கு வ‌றுவ‌ல்


உருளைக்கிழ‌ங்குன்னு சொன்னாலே சில‌ பேர் எங்கே எங்கேனு கேப்பாங்க‌.அந்த‌ அள‌வுக்கு உருளை மேல‌ ப‌ல‌ பேருக்கு பிரிய‌ம்..என‌க்கு கூட‌ உருளைக்கிழ‌ங்கு வ‌ருவ‌ல்,உருளைக்கிழ‌ங்கு தொக்கு,உருளை பிர‌ட்ட‌ல் இதெல்லாம் ரொம்ப‌ பிடிக்கும்,,அப்புற‌ம் கிராம‌த்துல‌ எங்க‌ம்மா நாட்டுக்கோழி குழ‌ம்போட‌ இந்த‌ உருளைக்கிழ‌ங்க‌ கொஞ்ச‌ம் பெரிய‌ துண்டா வெட்டி போட்டு ம‌ண‌க்க‌ ம‌ண‌க்க‌ குழ‌ம்பு வெப்பாக‌..அடேங்க‌ப்பா என்ன‌ ம‌ணாம்,என்ன‌ ருசி..அப்பா...நின‌ச்சாலே நாக்குல‌ எச்சில் ஊறுதுப்பா,,அதோட‌ நான் வெக்குற‌ இந்த‌ உருளைக்கிழ‌ங்கு பிர‌ட்ட‌லும்,கூட‌வே வெக்கிற‌ சாம்பாரும் என் த‌ம்பிக்கு ரொம்ப‌ பிடிக்கும்,,அத‌னால‌ தான் இந்த‌ உருளைக்கிழ‌ங்கு,பிர‌ட்ட‌லும்,வ‌றுவ‌லும் எப்ப‌டி ப‌ண்ண‌னும்னு சொல்ல‌ப்போறேன்,என் அலுவ‌ல‌க‌த்துல‌ இதுக்கு ஒரு கும்ப‌லே இருக்கு தெரியுமா..ச‌ரி,விச‌ய‌த்துக்கு வ‌ருவோமா..
தேவையான‌வை:
உருளைக்கிழ‌ங்கு 1/4 கிலோ
‌த்த‌ல் பொடி 25 கிராம்
ம‌ல்லிப்பொடி 1 ஸ்பூன் (தேவையானா ப‌ய‌ன்ப‌டுத்திக்க‌லாம்)
உப்பு தேவைக்கு
ரீஃபைன்ட் ஆயில் 100 மில்லி
எலுமிச்சை 1/2 மூடி
த‌யிர் 1 ஸ்பூன்
க‌ர‌ம் ம‌சாலா அல்ல‌து சிக்க‌ன் ம‌சாலா ‍வாச‌னைக்கு
செய்முறை:
முத‌ல்ல‌ உருளைக்கிழ‌ங்கை ந‌ல்லா க‌ழுவி தோல‌ லேசா சீவி குட்டி குட்டியா ந‌றுக்கி சூடான‌ த‌ண்ணீருல‌ போட்டு வ‌டி க‌ட்டி எடுத்து வெச்சுக்க‌னும்.இப்ப‌ உருள‌க்கிழ‌ங்கோட‌ வ‌த்த‌ல் பொடி,ம‌ல்லிப்பொடி,உப்பு,த‌யிர்,எலுமிச்ச‌ சாறு கொஞ்ச‌ம் த‌ண்ணீரும் சேர்த்து ந‌ல்லா பிச‌ஞ்சி கொஞ்ச‌ நேர‌ம் ஊற‌ வெக்க‌னும்,,குறை‌ஞ்ச‌து ஒரு 15 நிமிச‌ம் எடுத்துக்க்லாம்,,ஏன்னா ஊறுனா தான் உருளைக்கிழ‌ங்கு பொறிக்கும் போது ம‌சாலா உதிர்ந்து போகாம‌ இருக்கும்,
அடுப்பை சிம்‍ ல‌ வெச்சிட்டு வாணாலியில‌ எண்ணைய‌ காய‌ வெக்க‌னும்,ந‌ல்லா காய்ஞ்ச‌தும் உருளைக்கிழ‌ங்க‌ போட்டு ஒரு வாண‌லிய‌ மூடி வெச்சிட‌னும்,ஏன்னா அப்ப‌ தான் சீக்கிர‌மா வேகும்,கொஞ்ச‌ நேர‌த்துல‌ பிர‌ட்டி விட்டிட்டு கொஞ்ச‌ நேர‌த்துல‌ எடுத்து ப‌ரிமார‌லாம்.அதுவும் த‌யிர் சாதத்தோட‌ வெச்சி சாப்பிட்டா ஆகா..செம‌,செம‌ ராசா.செஞ்சி பாருங்க‌ப்பு..

சென்னா ம‌சாலா


ந‌ம்மூரு கொண்டை க‌ட‌லைய‌ தான் சென்னானு சொல்றாங்க‌.இந்த‌ சென்னா ம‌சாலா த‌யாரிக்குற‌து ரொம்ப‌ ஈஸி.சீக்கிர‌மா ச‌மைச்சிட‌லாம்.ஒரு முக்கிய‌மான‌ விச‌ய‌ம் என்னான்னா க‌ட‌லைய‌ குறைஞ்ச‌து 5 ம‌ணிநேர‌மாவ‌து ஊற‌ வெச்சா ந‌ல்ல‌து.இல்லாட்டி ஃப்லாஸ்க்குல‌ அல்ல‌து ஹாட் பாக்ஸ்ல‌ சூடான‌ த‌ண்ணி ஊத்தி அதுல‌ சென்னாவ‌ போட்டு வெச்சா சீக்கிர‌மா ஊறிடும்.ச‌ரி,எப்ப‌டி ச‌மைக்க‌லாம்னு பாக்க‌லாமா..
தேவையான‌ பொருட்க‌ள்:
சென்னா 1/4 கிலோ
உப்பு தேவையான‌ அள‌வு
ம‌ஞ்ச‌ள் தூள் 1/4 சிட்டிகை
ம‌ல்லி த‌ழை 1/4 க‌ட்டு
வெங்காய‌ம் 1
த‌க்காளி 1
ப‌ச்ச‌ மிள‌காய் 3
முந்திரி 3
இஞ்சி+பூண்டு விழுது 1 ஸ்பூன்
வ‌த்த‌ல் தூள் 2 ஸ்பூன்
செய்முறை:
வாண‌லியில‌ 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு அதுல‌ க‌டுகு,உளுத்த‌ம் ப‌ருப்பு,க‌ருவேப்பிலை போட்டு வ‌த‌க்க‌வும்,அத்துட‌ன் ந‌றுக்கிய‌ ப‌ல்லாரி,கீறின‌ ப‌ச்ச‌ மிள‌காய‌ சேர்த்து வ‌த‌க்க‌வும்,ந‌ல்லா வ‌த‌ங்கின‌தும் பொடிசா ந‌றுக்கிய‌ த‌க்காளிய‌ சேர்த்து வ‌த‌க்க‌வும்,வ‌த‌ங்க‌ல‌னா கொஞ்ச‌ம் உப்பு சேர்த்துக்க‌லாம்.இப்ப‌ இஞ்சி பூண்டு விழுத‌ சேர்த்து ப‌ச்ச‌ வாச‌ம் போகுற‌ வ‌ரைக்கும் வ‌த‌க்க‌னும்,அத்தோட‌ ம‌ஞ்ச‌ள் தூள்,வ‌த்த‌ல் தூள்,கொஞ்ச‌ம் க‌ர‌ம் ம‌சாலாவும்,உப்பும் சேர்த்து வ‌த‌க்க‌வும். கொஞ்ச‌ம் த‌ன்ணி சேர்த்துக்க‌லாம்,
த‌ள‌ த‌ள‌னு கொதிச்சு வ‌ரும்போது அவிச்ச‌ கொண்டை க‌ட‌லைய‌ சேர்த்து கிள‌ற‌வும்,தீ மித‌மா இருக்க‌னும்.5 நிமிச‌ம் க‌ழித்து ந‌ல்ல‌ வெந்த‌தும் ந‌றுக்கின‌ கொத்த‌ ம‌ல்லி த‌ழைய‌ சேர்த்து இற‌க்க‌வும்.இப்ப‌ ம‌ண‌ம் ம‌ண‌க்குற‌ சென்னா ம‌சாலா ரெடி.

திங்கள், 18 ஜனவரி, 2010

வெஜ் ப‌ன்

தேவையான‌ பொருட்க‌ள்:

உருண்டையான‌ அல்ல‌து நீள‌மான‌ ப‌ன்- 4

வெண்ணெய் -2 ஸ்பூன்

ஸ்ட‌ஃபிங்க்:
துருவிய‌ ப‌னீர் -1/2 க‌ப்
பொடியா ந‌றுக்கிய‌ பால‌க்கீரை -1 க‌ப்
பொடியா ந‌றுக்கிய‌ காய்க‌றிக‌ள்,வெங்காய‌ம் த‌லா -1/4 க‌ப்
த‌க்காளி சாறு -1/4 க‌ப்
இஞ்சி+பூண்டு விழுது,மிள‌காய் தூள் த‌லா -1 ஸ்பூன்
துறுவிய‌ சீஸ் -2 ஸ்பூன்
க‌ர‌ம் ம‌சாலா -2 ஸ்பூன்
செய்முறை:

ப‌ன்னை இர‌ண்டா வெட்டி ஒரு ப‌க்க‌த்துல‌ காய்க‌றிக‌ள‌ நிர‌ப்புர‌துக்கு ஏத்த‌மாதிரி உள்ளே இருக்க‌ற‌ ப‌ன்னை சுர‌ண்டி எடுத்துட‌னும்.எண்ணெய‌ காய‌ வெச்சு அதோட‌ வெங்காய‌த்த‌ போட்டு வ‌த‌க்கி அத‌னோட‌ இஞ்சி பூண்டு விழுது,மிள‌காய் தூள‌ சேர்த்து வ‌த‌க்க‌னும்,அதுல‌ காய்க‌றிக‌ள்,கீரை,உப்பு எல்லாம் சேர்த்து குறைஞ்ச‌ தீயில‌ கொஞ்ச‌ நேர‌ம் கிள‌றி விட‌னும்,காய் வெந்ததும் துறுவின‌ ப‌னீர்,க‌ர‌ம் ம‌சால‌ தூள்,த‌க்காளி சாறு சேர்த்து கிள‌ரி சீசையும் சேர்த்து இற‌க்க‌வும்.இந்த‌ க‌ல‌வைய‌ சுர‌ண்டி எடுத்த‌ ப‌ன்னுல‌ நிர‌ப்ப‌னும்,இப்ப‌ வெட்டிய‌ இன்னொரு ப‌ன்னால‌ அதை மூடி கொஞ்ச‌ம் வெண்ணெய‌ த‌ட‌வி தோசை கல் மேல‌ வ‌ச்சி இர‌ண்டு ப‌க்க‌மும் திருப்பி போட்டு ப‌ரிமாற‌னும்,குட்டி ப‌ச‌ங்க‌ ஸ்கூல் விட்டு வ‌ந்த‌ வுட‌னே இந்த‌ வெஜ் ப‌ன்ன‌ கொடுத்தா ந‌ல்ல‌ சாப்பிடுவாங்க‌,

திங்கள், 11 ஜனவரி, 2010

ப‌ய‌த்த‌ம் ப‌ருப்பு பீன்ஸ் பொரிய‌ல்:



பீன்ஸ் ச‌த்திய‌மா ந‌ம்மூரு காய் கிடையாது.ஆனாலும் ந‌ம்ம‌ வீட்டு ச‌ம‌ய‌ல்ல‌ பீன்ஸ்,கார‌ட் இல்லாம‌ இருக்காது..அம்புட்டு ச‌த்துனு சொல்வாங்க‌,இம்புட்டு அழ‌கான‌ ச‌த்தான‌ ப‌ச்ச‌ பீன்ஸோட‌ ந‌ம்மூரு ப‌ய‌த்த‌ ப‌ருப்பையும் செர்த்து ச‌மைச்சா எப்ப‌டி இருக்கும்,,ம்ம்,,செம‌யாதான் இருக்கும்..
தேவையான‌வை:
பீன்ஸ் 100 கிராம்
ப‌ய‌த்த‌ம் ப‌ருப்பு 50 கிராம்
அரைக்க‌:
தேங்காய் துருவ‌ல் ஒரு கைப்பிடி
ப‌ச்ச‌மிள‌காய் 5 கார‌ம் வேணும்னா கூட‌ 2 சேர்த்துக்க‌லாம்.
சீர‌க‌ம் 1 ஸ்பூன்
தாளிக்க‌:
ரீபைன்ட் ஆயில் -2 ஸ்பூன்
க‌‌டுகு -1 சிட்டிகை
சின்ன‌ வெங்காய‌ம் -2
செய்முறை :
ப‌ய‌த்த‌ம் ப‌ருப்பை க‌ளைந்து வாணலியில் அள‌வான‌ த‌ண்ணீரில் வேக‌விட‌வும்,அரைவேக்காட்டில் அரிந்து வைத்துள்ள‌ பீன்ஸை சேர்த்து அத்துட‌ன் சிறித‌ள‌வு உப்பு சேர்த்து கிள‌றி வேக‌விட‌வும்.த‌ண்ணீர் வ‌ற்றிய‌தும் அத்துட‌ன் அரைத்து வைத்துள்ள‌ ம‌சாலாவை சேர்த்து கிள‌றி மூடி வைக்க‌வும்.அடுப்பை சிம்மில் வைக்க‌வும்.ப‌ருப்பு அதிக‌மாக‌ வேக‌ விட‌வேண்டாம்,ஏனெனில் ந‌ன்றாக‌ அவிந்தால் ப‌ருப்பும்,பீன்ஸும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து விடும்,,அதாவ‌து பொய் அவிய‌லா அவிக்க‌னும்,,க‌ல‌வையை இற‌க்கி வைக்க‌வும்,வாண‌லியில் ரீபைன்ட் ஆயில் விட்டு அத்துட‌ன் க‌டுகு,க‌ருவேப்பிலை சேர்த்து வ‌த‌க்கி அத்த்டுட‌ன் சின்ன‌ வெங்காய‌ம் சேர்க்க‌வும்,பின் பீன்ஸ்+ப‌ருப்பு க‌ல‌வையை சேர்த்து லேசாக‌ கிள‌றி இற‌க்கி ப‌ரிமாற‌வும்..மிக‌ வித்தியாச‌மான‌ டிஷ்..

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

அவிய‌ல்

ந‌ம்மூருல‌ ,கிராம‌ங்க‌ள்ள‌ உள்ள‌ க‌ல்யாண‌ வீடுக‌ள்ள‌ ம‌ற‌க்காம‌ இட‌ம் பிடிக்கிற‌து ந‌ம்மூரு அவிய‌ல் தான்,ஆகா என்ன‌ ருசி,என்ன‌ ம‌ண‌ம் தெரியுமா..எங்க‌ம்மா ரொம்ப‌ டேஸ்டா அவிய‌ல் செய்வாங்க‌..அட‌டா என்ன‌ ருசிப்பா..ந‌ல்ல‌ சுட‌ சுட‌ சாத‌ம் போட்டு,அதுல‌ முள்ள‌ங்கி சாம்பார ஊத்தி,அவிய‌ல்,கேர‌ட் பொரிய‌லும் வெச்சி,2 அப்ப‌ள‌மும் வெச்சி சாப்பிட்டா அட‌டா..ஈடு இணையே கிடையாது..ம்ம்..இதெல்லாம் இப்ப‌ ஏதாவ‌து ஒரு விடுமுறை நாளுல‌ தான் சாப்பிட‌ முடியுது..ஏன்னா வாழ்க்கை அம்புட்டு பிஸியாகி போச்சு,,அதுவும் பொங்க‌லுக்கு அவிய‌ல் தான் முத‌ல் இட‌ம்,,ச‌ரி இப்ப‌ அவிய‌ல் எப்ப‌டி வெக்க‌லாம்னு பார்க்க‌லாமா..
தேவையான‌வை:


அவரைக்காய், கத்தரிக்காய், சீனி அவ‌ரைக்காய், பூசணிக்காய், புடல‌ங்காய், சேனைகிழ‌ங்கு, நாட்டு வாழைக்காய்,பச்சைப் பட்டாணி, உருளைக் கிழங்கு, பீன்ஸ், கேரட், கோஸ், முருங்கைக்காய்,….இப்ப‌டி எந்த காயை வேணும்னாலும் அவிய‌லுக்கு ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம்.
தேங்காய் - 1/2 மூடி

ப‌ச்ச‌மிளகாய் – 10-12

சீர‌க‌ம் -1 ஸ்பூன்

ம‌ஞ்ச‌ள் தூள் – 1 ஸ்பூன்

பெருங்காய‌த்தூள் -1/2 ஸ்பூன்

உப்பு– தேவையான அள‌வு

‍ த‌யிர் -1 க‌ப்

தேங்காய் எண்ணை – 1/4 கப்
செய்முறை:
1. காய்களைக் கழுவி, பெரிய அளவுத் துண்டுகளாக வெட்டிக்கோங்க‌. 2.வெட்டின‌ காய்க‌ள்,ப‌ச்ச‌ ப‌ட்டாணி எல்லாத்தையும் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நீர் சேர்க்காமல் குக்கரில் வேக வெச்சிக்கோங்க‌. 3.தேங்காயைத் துருவி, பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து மென்மையாக அர‌ச்சிக்க‌னும். 4.வாணலியில் கொஞ்ச‌ம் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிச்சி வேகவ‌ச்ச‌ காய்கறிகள், அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போய், கலவை நன்றாக இறுகும்வரை கிளறணும். 5.புளிப்பில்லாத கெட்டித் தயிராக எடுத்து அதையும் அவிய‌லோட‌ சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அடுப்பை அணைத்துவிடனும்.மீதி தேங்கா எண்ணையைச் சேர்த்து, கொத்தமல்லி தூவிப் பரிமாறனும்,அவ்வ‌ள‌வு தான்.



ம‌ண‌ம் ஊரையே தூக்கும்,வாச‌னைய‌ மோப்ப‌ம் பிடிச்சு யாராவ‌து வீட்டு க‌த‌வ‌ த‌ட்டிடுவாங்க‌,ந‌ல்லா ச‌ம‌ச்சி சாப்பீட்டுட்டு என‌க்கு சொல்லுங்க‌ ச‌ரியா..

புதன், 6 ஜனவரி, 2010

கோதுமை மாவு பரோட்டா கீமா


பரோட்டாவை கடைகளில் மைதாமாவில் செய்து உள்ளே கீமா வைத்து சுருட்டி கொடுப்பார்கள், நான் இதை கோதுமைமாவில் செய்துள்ளேன். மிக முக்கியமான டிபன் அயிட்டம் சத்தான டிபன்.
தேவையான பொருட்கள்:
பரோட்டா த‌யாரிக்க‌:
கோதுமை மாவு - மூன்று கப் உப்பு ‍ ஒரு தேக்கரண்டி சோடாமாவு ‍ ஒரு சிட்டிக்கை பட்டர்(அ) நெய் - இரண்டு மேசைக்கரண்டி பால் - கால் கப் ச‌ர்க்க‌ரை -முன்று தேக்க‌ர‌ண்டி
கீமா த‌யாரிக்க‌:
கீமா - கால் கிலோ
எண்ணை ‍ இரண்டு தேக்க‌ர‌ண்டி
ப‌ட்ட‌ர்- 1 தேக்க‌ர‌ண்டி
வெங்காய‌ம் ‍ 5
ஃப்ரோஜ‌ன் பட்டாணி = இரண்டு தேக்க‌ர‌ண்டி
இஞ்சிபூண்டு பேஸ்ட் - இரண்டரை தேக்க‌ர‌ண்டி
ப‌ச்ச‌ மிளகாய் - 2
மிள‌காய்தூள் - கால் தேக்க‌ர‌ண்டி
ம‌ஞ்ச‌ள்தூள்- கால் தேக்க‌ர‌ண்டி
க‌ர‌ம்ம‌சாலாதூள் - அரை தேக்க‌ர‌ண்டி
சீர‌க‌த்தூள் - கால் தேக்க‌ர‌ண்டி
உப்பு- தேவைக்கு
ம‌ல்லித்த‌ழை சிறிது
செய்முறை :
கோதுமையில் சோடா,உப்பு, பட்டர் பால் சேர்த்து கலக்கி, தண்ணீர் ஊற்றி பிசைந்து ஊற வைக்கவும். இப்போது நல்ல ஊறவைத்த பரோட்டாமவை ஒரு பெரிய எலுமிச்சை அளவு எடுத்து பறத்தி அதில் ஒரு தேக்கரண்டி முழுவதும் தடவி புடவை கொசுவ‌ம் வைப்பது போல் வைத்து சுருளாக சுற்றி ஒரு தட்டில் அடுக்கி வைக்கவும்.
மைதா ப‌ரோட்டா :
கீமாவை சுத்தம் செய்து ஒரு வடிகட்டியில் போட்டு நீரை வடிக்கவிடவும். எண்ணையை காய வைதது வெஙகாயத்தை பொடியாக அரிந்து போட்டு வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன் முறுவலாகும் வரை சிம்மில் வைக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய கொத்து மல்லி,பச்சமிளகாய்,தக்காளியை போட்டு வதக்க்கவும் வதக்கி எல்லா தூள்களையும் போட்டு உப்பும் சேர்த்து கிளறி கடைசியில் கீமாவைப்போட்டு கிளறி சிம்மில் ஏழு நிமிடம் வேகவைத்து இறக்கவும். கீமா மட்டர் ரெடி.
இப்போது தட்டில் அடுக்கி வைத்துள்ள ஒவ்வொரு பரோட்டா சுருளயும் வட்ட வடிவ பரொட்டாகளாக தேய்த்து சுட்டெடுத்து ரெடியாக உள்ள கீமாவை இரண்டு மேசைக்கரண்டி அளவு வைத்து ரோல் பண்ண வேண்டியது.எட்டு பரோட்டா வரும்.
குறிப்பு :
இதில் ப‌ட்ட‌ர்,நான் ,(ஃபுரோஜன் பட்டாணி சிறிது) நீங்கள் கூட எந்த காய்கறி வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம்.இதை சிக்கன் கீமாவிலும் செய்யலாம்கோதுமை பரோட்டா செய்து இதை உள்ளே வைத்து சுருட்டினல் சாப்பிடும் போது நல்ல பஞ்சி மாதிரி இருக்கும்.
இதே கோதுமைமாவு பரோட்டாவை குழந்தைகளுக்கு 1 வயதில் இருந்து வாரம் ஒரு முறை செய்து பால் சர்க்கரை சேர்த்து ஊறவைத்து கொடுத்தால் நல்ல தளதளன்னு மின்னுவார்கள். இன்னும் நல்ல ஷாப்டாக வர சிறிது உடைத்த கடலையை பொடித்து சேர்த்து கொள்ளலாம்...

உருளைக்கிழ‌ங்கு தொக்கு


நிஜ‌ம்மாக‌வே ரொம்ப‌ ருசியா இருக்கும்,,கார‌ சார‌மான‌ சாப்பாடுனா உருளைக்கிழ‌ங்கு தொக்கு தான் பெஸ்ட்.அதுவும் சாம்பாரோட‌ சேர்த்து சாப்பிட்டா சூப்ப‌ரா இருக்கும்,அதுவும் ந‌ல்லா ப‌சியோட‌ இருக்கும்போது அட‌டா தேவாமிர்த‌மா இருக்கும் போங்க‌,ச‌மைக்க‌ ஆர‌ம்பிக்க‌லாமா.

தேவையான‌வை:
உருளைக்கிழ‌ங்கு 1/4 கிலோ
க‌டுகு 1/2 ஸ்பூன் க‌ருவேப்பிலை ‍கொஞ்ச‌ம்
வ‌த்த‌ல் பொடி 25 கிராம்
ம‌ல்லிப்பொடி 2 ஸ்பூன்
ம‌ஞ்ச‌ள் பொடி 1/4 ஸ்பூன்
ப‌ல்லாரி‍ 1
த‌க்காளி 1
உப்பு தேவையான‌ அள‌வு
இஞ்சி+பூண்டு விழுது 1 ஸ்பூன்
ம‌ல்லித்த‌ழை சிறிது
ரீஃபைன்ட் ஆயில் 3 ஸ்பூன்
செய்முறை:
உருளைக்கிழ‌ங்க‌ ந‌ல்லா அவிச்சி தோல் உறிச்சி குட்டி குட்டியா ந‌றுக்கி வெச்சுக்க‌னும்,வாண‌லியில‌ எண்ணெய் விட்டு ந‌ல்லா காய்ஞ்ச‌தும் க‌டுகு+உளுத்த‌ம்ப‌ருப்பு+க‌ருவேப்பிலை எல்லாம் போட்டு தாளிச்ச‌தும் பொடிசா ந‌றுக்கின‌ ப‌ல்லாரி போட்டு ந‌ல்லா வ‌த‌க்க‌னும்,அப்புற‌மா வெட்டி வெச்சிருக்க‌ற‌ த‌க்காளி போட்டு வ‌த‌ங்கின‌தும் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து ந‌ல்லா வ‌த‌க்க‌னும்,இப்ப‌ வ‌த்த‌ல் பொடி,ம‌ஞ்ச‌ள் பொடி,ம‌ல்லிப்பொடி உப்பு சேர்த்து கிள‌ற‌னும்,இப்ப‌ கொஞ்ச‌மா த‌ன்ணி சேர்த்து,அதோட‌ கொஞ்ச‌மா க‌ர‌ம் ம‌சாலா சேர்த்து ந‌ல்லா வாச‌ம் வ‌ந்த‌தும் ந‌றுக்கின‌ உருளைக்கிழ‌ங்கு சேர்த்து வ‌த‌க்க‌னும்,ப‌ச்சை வாச‌னை போன‌தும் கொஞ்ச‌மா ந‌றுக்கின‌ ம‌ல்லித்த‌ழைய‌ தூவி இற‌க்க‌னும்,ந‌ல்ல‌ ம‌ண‌ம்,,ந‌ல்ல‌ இருக்குல்ல‌..ச‌ரி,ச‌ரி ச‌மைச்சி சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க‌...