புதன், 31 மார்ச், 2010

பிரியாணி டிப்ஸ்


1. பிரியாணிக்கான‌ சாத‌த்தை முத‌ல்ல‌ உதிரா வ‌டிச்ச‌ பிற‌கு ம‌சாலாவோட‌ க‌ல‌க்கும்போது,சாத‌ம் கொதிக்க‌ கொதிக்க‌ இருக்க‌னும்ங்குற‌து முக்கிய‌ம்,அத‌னால‌ பிரியாணிக்கு ம‌சாலா த‌யாரிக்குற‌ ச‌ம‌ய‌த்துல‌ இன்னொரு அடுப்பில‌ சாத‌த்தை வேக‌ விட்டு முக்கால் ப‌த‌மா வ‌டிக்க‌லாம்,பாசும‌தி அரிசி சீக்கிர‌மா வெந்துடும்.



2. பிரியாணிக்கு "த‌ம்" போடும்போது பிரிய‌ணி க‌ல‌வை லேசான‌ த‌ண்ணீரோட‌ இருக்க‌னும்.த‌ண்ணீர் முழுதும் வ‌ற்றின‌ பிற‌கு த‌ம் போட்டா பிரிய‌ணி விறைச்சு போயி டேஸ்ட் கெட்டுடும்.



3. வெங்காய‌த்தை ந‌ல்ல‌ பொன்னிற‌மா வ‌த‌க்க‌ வ‌த‌க்க‌ தான் பிரியாணி நிற‌ம் ந‌ல்லா இருக்கும்,ஆனா ஃப்ரைட் ரைச்,புலாவு செய்யும்போது வெங்காய‌த்தை லேசாத்தான் வ‌த‌க்க‌னும்,அப்ப‌ தான் வெள்ளையா இருக்கும்.

4.பிரியாணிக்கு காய்க‌றி,ம‌சால‌ சேர்ந்த‌ பிற‌கு ம‌சாலா சேர்ந்த‌ தொக்கோட‌ எப்ப‌வுமே கொதிக்குற‌ த‌ண்ணீர் ஊற்றினா தான் டேஸ்டா இருக்கும்,ப‌ச்சை த‌ண்ணீர் ஊத்தினா அது நீர் கோர்த்து டேஸ்ட் மாறிப்போகும்.

5. பிரியாணி "த‌ம்" போடுற‌ முறை:

பிரியாணிக்கான‌ ம‌சாலா தொக்கோடு வெந்நீர் சேர்த்து கொதிச்ச‌ பிற‌கு அரிசி சேர்க்க‌னும்,அரிசி மேல‌ த‌ண்ணீர் நிற்காம‌ பிர‌ட்டின‌ மாதிரி சேர்ந்து வ‌ரும்போது,பாத்திர‌த்தோட‌ விளிம்புல‌ இடைவெளி இல்லாம‌ல் மூடி போட‌னும்.அந்த‌ பாத்திர‌த்துக்கு மேல‌ கொதிக்குற‌ த‌ண்ணீர் இருக்குற‌ க‌ன‌மான‌ பாத்திர‌த்தை ஐந்து நிமிஷ‌த்துக்கு வைக்க‌னும்,அடுப்பும் சிம்'மில‌ இருக்க‌னும்,இது தான் த‌ம் போடுத‌ல்..எப்புடீடீடீய்...

சிக்க‌ன் 65

என்ன‌தான் சிக்க‌னை வெச்சு அது, இதுனு ச‌மைச்சாலும் சிக்க‌ன் 65-க்கு ஈடு இணையே கிடையாது.
அட‌டா க‌ல‌ர் என்ன‌ ,டேஸ்ட் என்ன‌...ஆளாளுக்கு சும்மா சாப்பிட்டு த‌ள்ளிடுவாங்க‌ போங்க‌..
ஐ! பேரை கேட்ட‌ உட‌னே நாக்குல‌ எச்சில் ஊறுதா...அப‌ ச‌மைச்சு சுட‌ சுட‌ ப‌ரிமாருனா எப்ப‌டி இருக்கும்..பிர‌மாத‌ம் இல்லையா..





தேவையான‌ பொருட்க‌ள்:


சிக்க‌ன் (எலும்பு இல்லாதது) -1/2 கிலோ
இஞ்சி+பூண்டு விழுது -1 டீஸ்பூன்
மிள‌காய் தூள் -11/2 டீஸ்பூன் (கார‌ம் வேணும்னு நினைக்கிற‌வ‌ங்க‌ கூட‌ கொஞ்ச‌ம் சேர்த்துக்க‌லாம்)
கார்ன்ஃப்ளார் மாவு -1 டீஸ்பூன்
அரிசி மாவு -1 டீஸ்பூன்
முட்டை -1
க‌ரி ம‌சாலா அல்ல‌து சிக்க‌ன் 65 ம‌சாலா -1/4 டீஸ்பூன்
த‌யிர் -3 டீஸ்பூன்
உப்பு -தேவையான‌ அள‌வு
எண்ணெய் -தேவையான‌ அள‌வு

செய்முறை:

சிக்க‌னை ந‌ல்லா க‌ழுவி லேசா ம‌ஞ்ச‌ள் பொடி சேர்த்து ஊற‌ வெச்சு 10 நிமிஷ‌ம் க‌ழிச்சு ந‌ல்லா க‌ழுவி எடுத்துக்க‌னும். அதுக்க‌ப்புற‌மா த‌யிர், வ‌த்த‌ல் தூள், கார்ன்ஃப்ள‌ர் மாவு, அரிசி மாவு, முட்டை,க‌ர‌ம் ம‌சாலா,த‌யிர்,உப்பு சேர்த்து ந‌ல்லா பிர‌ட்டி ஒரு அரை அல்ல‌து ஒரு ம‌ணி நேர‌ம் ஊற‌ வெச்சு சூடான‌ எண்னெயில‌ பொரிச்செடுக்க‌னும், அல‌ங்க‌ரிக்க‌ வெங்காய‌த்தை வ‌ட்ட‌ வ‌ட்ட‌மா த‌ட்டுல‌ சுற்றி வைக்க‌லாம், லேசா கொத்த‌ ம‌ல்லித்தழை தூவ‌லாம். சாப்பிடும்போது எலுமிச்சையை பிழிஞ்சி விட்டுக்க‌லாம். இதை அப்ப‌டியே சாப்பிட‌லாம்.. ஆஹா!! என்ன‌ ம‌ண‌ம்.

உளுந்த‌ங்க‌ளி

ரொம்ப‌ கால‌த்துக்கு முன்னாடி வ‌ரைக்கும் இருந்த‌ ப‌ழ‌மையான‌ உணாவு இது.கிராம‌த்துல‌ பொன்னுங்க‌ வ‌ய‌சுக்கு வ‌ந்த‌ உட‌னே உளுந்த‌ங்க‌ளியை தான் கிண்டி சலிக்க‌ ச‌லிக்க‌ சாப்பிட‌ சொல்லுவாங்க‌. சாப்பிட்டு முடியாது.. ஆனா செம‌ டேஸ்ட் .
ஏன்னா இது இடுப்பு எலும்புக‌ளுக்கு ப‌ல‌ம் கொடுக்கும்,




தேவையான‌ பொருட்க‌ள்:


க‌ளி மாவு -2 க‌ப்
(அதாவ‌து
ஒரு க‌ப் முழு உளுந்து கூட‌ ஒரு க‌ப் ப‌ச்ச‌ரிசி‍'ங்குற‌ விகித‌த்துல‌ சேர்த்து மாவு திரிக்க‌னும்)
க‌ருப்ப‌ட்டி -2 க‌ப்

ந‌ல்லெண்ணெய்- தேவையான‌ அள‌வு

செய்முறை:


க‌ருப்ப‌ட்டித் தூளை ஐந்து ட‌ம்ள‌ர் த‌ண்ணீருல‌ க‌ரைச்சு வ‌டிக‌ட்டிக்க‌னும்.

வ‌டிகட்டின‌ க‌ருப்ப‌ட்டி த‌ண்ணீரோட‌ கொஞ்ச‌ கொஞ்ச‌மா தூவி க‌ட்டி இல்லாம‌ க‌ரைச்சு ஒரு பாத்திர‌த்துல‌ ஊத்த‌னும்.


அந்த‌ பாத்திர‌த்தை அடுப்பிலே வெச்சு கொஞ்ச‌ம்,கொஞ்ச‌மா ந‌ல்லெண்ணெய் ஊற்றி கிள‌ர‌ ஆர‌ம்பிக்க‌னும்,லேசான‌ தீயை ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌டுத்த‌னும்.

மாவு உருண்டு ச‌ட்டியில‌ ஒட்டாத‌ ப‌தத்தில் வ‌ரும்போது இற‌க்கி , ஆறின‌ பிற‌கு கையில் ந‌ல்லெண்ணெய் தொட்டு உருட்ட‌னும், இப்ப‌ உளுந்த‌ங்க‌ளி ரெடி.. ந‌ல்லா சாப்பிடுங்க‌..ந‌ம்மூரு ருசி..

ம‌க்ரூன்

திருநெல்வேலினா அல்வா,கோவில்பட்டி'னா க‌ட‌ல‌ மிட்டாய்,தூத்துக்குடினா ஆஹா ஞாப‌க‌ம் வ‌ந்துடுச்சா ஆமாமா "ம‌க்ரூன்" தான்.அதை அதை ப‌ற்றி தான் ச‌மைக்க‌ போறோம். வாங்கோ..



தேவையான் பொருட்க‌ள்:

முந்திரிப்ப‌ருப்பு -100 கிராம்
சீனி(சுக‌ர்) -100 கிராம்
முட்டை -3

செய்முறை:


முந்திரியையும்,சீனியையும் த‌னித்த‌த‌னியா மிக்சியில‌ போட்டு நைசா பொடிச்சுக்க‌னும்.

முட்டையை உடைச்சு வெள்ளைக்கருவை ம‌ட்டும் ஒரு கிண்ண‌த்துல‌ எடுத்து ந‌ல்லா நுரைக்க‌ அடிச்சுக்க‌னும்.

முந்திரிப்பொடி,சீனிப்பொடியையும் முட்டை வெள்ளைக்க‌ருவோட‌ சேர்த்து ந‌ல்லா க‌ல‌ந்து அடிச்சுக்க‌னும். அது கெட்டி க‌ல‌வையாகுற‌ வ‌ரைக்கும் அடிக்க‌னும். பாத்திர‌த்தை கீழே சாய்ச்சாலும் கூட‌ விழ‌க்கூடாது, அம்புட்டு கெட்டியாக‌னும்.

ந‌ல்லா கெட்டியாகி இறுக‌ ஆர‌ம்பிச்ச‌தும் சின்ன‌ சின்ன‌ கோன்,இல்லாட்டி கிண்ண‌த்துல‌ க‌ல‌வையை நிர‌ப்பி கேக் அவ‌ன்'ல‌ ப‌த்து நிமிஷ‌த்துக்கு பேக் ப‌ண்ண‌னும்.

கேக் அவ‌ன் இல்லாத‌வ‌ங்க‌ இட்லி பாத்திர‌த்துல‌ ம‌ண‌ல் நிர‌ப்பி ம‌ண‌ல் சூடு வ‌ந்ததும் ம‌க்ரூன் க‌ல‌வையை ஒரு ஸ்பூனால‌ ஒரு த‌ட்டுல‌ வ‌ட்ட‌ வ‌ட்ட‌மா விட்டு ம‌ண‌ல் மேல‌ வெச்சு மூடி வேக‌ வைக்க‌னும்.இப்ப‌ ம‌க்ரூன் ரெடி..

பாக‌ற்காய் சிப்ஸ்



பாக‌ற்காய் இந்த‌ வார்த்தையை கேட்டாலே நிறைய‌ பேர் ஓடோடிப் போயிடுவாங்க‌,, ஏன்னா க‌ச‌ப்பு இல்லையா..ஆனாலும் பாக‌ற்காய் உட‌ம்புக்கு ரொம்ப‌ ந‌ல்ல‌து..என்ன‌ தான் ச‌மைச்சாலும் ச‌ம‌ய‌த்துல‌ பாக‌ற்காய் க‌ச‌ந்துடும்,அத‌னால‌ க‌ச‌ப்பில்லாத‌ பாக‌ற்காய் சிப்ஸ் எப்டி செய்ய‌ற‌து'ன் பாக்க‌லாம்.




தேவையான‌ பொருட்க‌ள்:

பாக‌ற்காய் -100
ம‌ஞ்ச‌ள் தூள் - 1 சிட்டிகை
வ‌த்த‌ல் தூள் - 1ஸ்பூன்
த‌னியாத்தூள் - 1/2 ஸ்பூன்
இஞ்சி+பூண்டு விழுது - 1 ஸ்பூன்
அரிசிமாவு - 1கைப்பிடி
எண்ணெய் - தேவையான‌ அளவு
புளித்த‌ண்ணீர்- 1/2 க‌ப்
உப்பு - தேவையான‌ அளவு

செய்முறை:

பாக‌ற்காய வட்ட‌ வ‌ட்ட‌மா மெல்லிசா ந‌றுக்கிட்டு புளித்த‌ண்ணில‌ அல‌சி த‌ண்ணிய‌ வ‌டிச்சிட‌னும், இந்த‌ பாக‌ற்கையோட‌ ம‌ஞ்ச‌ள் தூள்,வ‌த்த‌ல் தூள்,தேவையான‌ அளாவு உப்பு,இஞ்சி பூண்டு விழுது, ஒரு கை அரிசி மாவு எல்லாம் சேர்த்து லேசா த‌ண்ணி தெளிச்சு பிச‌றி, ப‌த்து நிமிஷ‌ம் ஊற‌ வெச்சு எண்ணெயில‌ போட்டு பொரிச்செடுத்தா ந‌ல்லா க்ரிஸ்பியான‌ பாக‌ற்காய் சிப்ஸ் ரெடி..

செவ்வாய், 30 மார்ச், 2010

வாழைத்த‌ண்டு ர‌ச‌ம்


அறுசுவை விருந்துக‌ள்ள‌யும் ர‌ச‌த்துக்கு த‌னி இட‌ம் உண்டு. சாப்பாட்டை சீக்கிர‌மா ஜீர‌ணமாக்குற‌ இந்த‌ ர‌ச‌த்துல‌ ப‌ல‌ வ‌கைக‌ள் இல்லையா.. அதுல‌ வாழைத்துண்டு ர‌ச‌மும் ஒன்ணு.இது ஆரோக்கிய‌த்தை த‌ருகிற‌தோட‌ சிறுநீர‌க‌ க‌ல் அடைப்பையும் ச‌ரியாக்கும்.

தேவையான‌ பொருட்க‌ள்:

ஒரு அடி நீள‌ வாழைத்த‌ண்டு -1
துவ‌ர‌ம் ப‌ருப்பு -100 கிராம்
த‌க்காளி -3
ர‌ச‌ப்பொடி -2 டீஸ்பூன்
எலுமிச்ச‌ம் ப‌ழ‌ம் -1
ம‌ஞ்ச‌ள் பொடி -1/4 டீஸ்பூன்
பெருங்காய‌ப்பொடி -1டீஸ்பூன்
கொத்தம‌ல்லித் த‌ழை -சிறிது
உப்பு -தேவையான‌ அள‌வு

தாளிக்க‌:


ரீஃபைன்ட் ஆயில் -2 டீஸ்பூன்
உளுத்த‌ப‌ருப்பு -1 டீஸ்பூன்
க‌ருவேப்பிலை -சிறிது
க‌டுகு -1 டீஸ்பூன்


செய்முறை:

வாழைத்த‌ண்டை குட்டி குட்டியா ந‌றுக்கி மிக்ஸியில‌ அடிச்சு சாறு எடுத்துக்க‌னும். துவ‌ர‌ம் ப‌ருப்பை வேக‌ வெச்சு ம‌சிச்சுக்க‌னும்.

அடுப்பை மித‌மான் தீயில‌ வெச்சிட்டு வாண‌லியில‌ எண்ணெய் விட்டு க‌டுகு, உளுத்த‌ம்ப‌ருப்பு, க‌ருவெப்பிலை போட்டு தாளிச்சுக்க‌னும், இப்ப‌ ந‌றுக்கி வெச்சிருக்குற‌ த‌க்காளி போட்டு வ‌த‌க்கிக்க‌னும்.

இந்த‌ க‌ல‌வையோட‌ வாழைத்த‌ண்டுச் சாறு, ம‌சிச்ச‌ துவ‌ர‌ம் ப‌ருப்பு ரெண்டையும் சேர்க்க‌னும். லேசா கொதிக்க‌ ஆர‌ம்பிச்ச‌தும் பெருங்காய‌தூள், ம‌ஞ்ச‌ள் தூள், ர‌ச‌ப்பொடி,உப்பு,எலுமிச்சை சாறு சேர்த்து ந‌ல்லா கிண்டி விட்டு கொதிக்க‌ வெச்சு இற‌க்க‌னும்.

இப்ப‌ ந‌ல்ல‌ வாச‌னையான‌ வாழைத்த‌ண்டு ர‌ச‌ம் ரெடி. இதோட‌ ந‌றுக்கின‌ ம‌ல்லித்த‌ழையை தூவி ப‌ரிமாற‌ வேண்டிய‌து தான் பாக்கி.

இந்த‌ ர‌ச‌ம் டேஸ்டான‌து ம‌ட்டும‌ல்ல‌! ம‌ருத்துவ‌ குண‌மும் நிறைஞ்ச‌தும் கூட‌..

ச‌ர்க்க‌ரை நோய் குறைக்கும் ரெசிபி


காஃபியில‌ ச‌ர்க்க‌ரை போட‌வா,இல்ல போட‌ வேணாமா‌.என்ன‌ நீங்க‌ சுக‌ர் பேஷ‌ன்டா..இந்த‌ கேள்விக‌ள் அதிக‌மாக‌வே ச‌மூக‌த்துல‌ உலா வ‌ந்துட்டிருக்கு..பிற‌க்குற‌ குழ‌ந்தையில‌ இருந்து வ‌ய‌தான‌வ‌ங்க‌ வ‌ரைக்கும் இப்ப‌ ச‌ர்க்க‌ரை நோய் ச‌க‌ஜ‌மாகிப் போச்சு..

இந்த‌ நோய் ப‌ர‌ம்ப‌ரை நோயா இருந்தாலும்,நாம‌ பாக்குற‌ வேலைக‌ள், உணவுக் க‌ட்டுப்பாடுக‌ளும் ஒரு கார‌ணம் தான்..இதை க‌ட்டுப்ப‌டுத்த‌ மாத்திரை ம‌ருந்துக‌ள் ம‌ட்டும் தீர்வு இல்ல‌,,வாழ்நாளை சுவாராசிய‌மாக்க‌ உணாவுக்க‌ட்டுப்பாடு ரொம்ப‌ அவ‌சிய‌மான‌து.

ஏன்ன‌ ர‌த்த‌த்துல‌ ச‌ர்க்க‌ரை அளாவு எப்ப‌வும் ச‌ரியான‌ விகித்த‌துல‌ இருக்க‌னும். ஒண்ணும் சாப்பிடாத‌ நேர‌த்துல‌ ச‌ர்க்க‌ரை அள‌வு 80'ல‌ இருந்து 110 மில்லிகிராம் இருக்க‌லாம்.

சாப்பிட்ட‌ பிற‌கு 2 ம‌ணி நேர‌ம் க‌ழிச்சு 82'ல‌ இருந்து 120 மில்லிகிராம் இருக்க‌லாம்.இதை எல்லாம் தாண்டினாத்தான் ச‌ர்க்க‌ரை நோய் வ‌ந்துடுச்சினு புரிஞ்சிக்க‌லாம்,


இது எல்ல‌த்தையும் ச‌ரிசெய்ய‌ ஒரு லேசான‌ ரெசிபி இதோ:



வாழைப்பூ க‌ஞ்சி:


தேவையான‌ பொருட்க‌ள்:

வாழ‌ப்பூவிலிருந்து எடுக்க‌ப்ப‌ட்ட‌ பூக்க‌ள்- 25
ச‌ம்பா அரிசி -2 ஸ்பூன்
நெய் -1/4 டீஸ்பூன்
ந‌ல்லெண்ணெய் -1 ஸ்பூன்
பிரிஞ்சி இலை- 1
இஞ்சித்துருவ‌ல்- 1 டீஸ்பூன்
ந‌றுக்கின‌ ம‌ல்லித்த‌ழை,புதினா -2 ச்பூன்
பொடியா ந‌றுக்கின‌ த‌க்ககாளி -1 ஸ்பூன்
உப்பு -தேவையான‌ அள‌வு


செய்முறை:

வாண‌லியில‌ நெய்,ந‌ல்லெண்ணெய் விட்டு காய்ந்த‌தும் பிரிஞ்சி இலை வ‌றுத்து, அதோட‌ த‌க்காளி,இஞ்சித்துருவ‌ல்,ந‌றுக்கின‌ வாழைப்பூ போட்டு வ‌த‌க்கி அரிசியைப் போட்டு 2 நிமிஷ‌ம் கிள‌ர‌னும் அரிசியில‌ எண்ணெய் க‌ல‌க்குற‌ வ‌ரைக்கும் கிள‌ரி உப்பு போட்டு கூழா வேக‌த் தேவையான‌ அள‌வு த‌ண்ணீர் விட்டு குக்க‌ருல‌ வேக‌ வைக்க‌னும்,


இற‌க்கின‌தும் கொத்த‌ம‌ல்லி,புதினா தூவினா வாழைப்பூ க‌ஞ்சி ரெடி.. இதை சாப்பிட‌ கொஞ்ச‌ம் க‌ச‌ப்பாக‌வும்,துவ‌ர்ப்பாக‌வும் இருக்கும்,ஆனா உட‌ம்போட‌ கொழுப்பை குறைக்கும், வ‌யிற்றுச்ச‌தையை குறைக்கும், அத‌னால‌ எப்ப‌ வேணா சாப்பிட‌லாம்..

ப‌ழ‌ங்க‌ளின் ந‌ன்மைக‌ள்:


காலி வ‌யிற்றில‌ ப‌ழ‌ங்க‌ள‌ சாப்பிட்டா உட‌ம்புல இருக்குற‌ ந‌ச்சுப்பொருட்க‌ள் எல்லாம் அடித்துத் த‌ள்ளி வெளியே கொண்டு வ‌ந்துடும், இத‌னால‌ உட‌ல் எடை குறைகிற‌தோட‌ புத்துண‌ர்ச்சியும், தெம்பும் உட‌லுக்குத் தானா கிடைக்கும்.


2.மூனு ந‌ட்க‌ள் ப‌ழ‌ ட‌ய‌ட்'டுல‌ ம‌ட்டும் இருந்து தான் பாருங்க‌ளேன்..அப்டினா 3 நாட்க‌ளுமே ப‌ழ‌ம்,ப‌ழ‌ர‌ச‌ம்,சால‌ட் ம‌ட்டுமே சாப்பிட‌னும்.இப்ப‌டி ம‌ட்டும் ட்ரை ப‌ண்ணுனீங்க‌னா உங்க‌ உட‌லும்,முக‌மும் ஜொலிஜொலிக்கும். ஆனா ஒண்ணுங்க‌ உங்க‌ளுக்கு நீர‌ழிவு நோய் இருந்தா ப‌ழ‌ ட‌ய‌ட் வேணாம்.


3.ப‌ழ‌ங்க‌ள‌ எப்ப‌வுமே சாப்பாடு முடிச்ச‌வுட‌னே சாப்பிட‌கூடாது,ஆனா காலி வ‌யிற்றுல‌ ப‌ழ‌ங்க‌ள‌ சாப்பிட‌லாம். ஏன்னா ரெண்டு இட்லி சாப்பிட்ட‌ பிற‌கு ஒரு ப‌ழ‌ம் சாப்பிட்டா எல்லாமே வ‌யிற்றுக்கு நேரா போயிடும், ப‌ழ‌ம் ஈஸியா ஜீர‌ண‌மாகிடும்,ஆனா இட்லி செரிக்க‌ நேர‌மாகும், அத‌னால‌ இட்லி அமில‌மா மாறிடும்,அதோட‌ ஜீர‌ண‌மான‌ ப‌ழ‌மும்,ஜீர‌ணாமாக‌ உத‌வுற‌ அமில‌ங்க‌ளும் ஒண்ணா சேர்ந்துட‌ற‌துனால‌ ஒரே க‌லாட்டாவாகி வ‌யிற்றுல‌ உணவு கெட்டுப் போக‌ தொட‌ங்கும், இதுக்குத்தான் சாப்பாடு சாப்பிட்ட‌ பிற‌கு ப‌ழ‌ம் சாப்பிட‌க்கூடாது புரியுதா,,



4.ப‌ழ‌ர‌ச‌மா சாப்பிடுற‌த‌ விட‌ ப‌ழ‌த்துண்டுக‌ளா சாப்பிடுற‌துனால‌ நார்ச்ச‌த்து நிறைய‌ கிடைக்கும். ப‌ழ‌ர‌ச‌மா சாப்பிடற‌ நேர‌த்துல‌ க‌ட‌ க‌ட‌னு ஜூஸை குடிக்காம‌ல் கொஞ்ச‌ம்,கொஞ்ச‌மா உறிஞ்சி வாயில‌ சுர‌க்குற‌ எச்சிலோட‌ சேர்த்து விழுங்க‌னும்.

5.ஒரே ஒரு கீற்று த‌ர்பூச‌ணி சாப்பிட்டா சில‌ர் பெருசா ஏப்ப‌ம் விடுவாங்க‌. ஒண்ணு ரெண்டு வாழ‌ப்ப‌ழ‌ம் சாப்பிட்டா பாத்ரூம் பார்த்து ஓடுவாங்க‌. ப‌ப்பாளித்துண்டுக‌ள‌ சாப்பிட்டா சில‌ருக்கு வ‌யிறு பை மாதிரி வீங்கிடும், ஏன்'னு தெரியுமா?...நான் சொல்றேன் கேளுங்க‌.. ப‌ழ‌ம் சாப்பிடுற‌துக்கு முன்னாடி சாப்பிட்ட சாப்பாட்டோட‌ ப‌ழ‌ர‌ச‌ம் சேரும்போது கிள‌ம்புற‌ "வாயு" தான் கார‌ணம். சில‌ருக்கு வாயு வ‌யிற்றுல‌ த‌ங்காம‌ ஏப்ப‌மா வெளியே வ‌ரும், இதே ப‌ழ‌ங்க‌ள‌ சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிட்டுப் பாருங்க‌ எந்த‌ தொந்த‌ர‌வும் வ‌ராது.. ஒகே..

6.வெறும் வ‌யிற்றுல‌ ப‌ழ‌ங்க‌ள‌ சாப்பிட்டா நாற்ப‌து வ‌ய‌தை நெருங்கும்போதே வ‌ருகிற‌ ந‌ரைமுடி,வ‌ழுக்கை,ந‌ர‌ம்புத்த‌ள‌ர்ச்சி,க‌ருவ‌ளைய‌ம் இதெல்லாம் சொல்லாம‌ல் கொள்ளாம‌ல் ஓடிடும்.


7.க‌டைசியா ஒண்ணு சொல்றேன் ந‌ல்லா கேட்டுக்கோங்க‌..ப‌ழ‌ங்க‌ள‌ ச‌ரியான‌ முறையில‌ சாப்பிட்டா (அட‌ சாப்பிட்டுத்தான் பாருங்க‌ளேன்)உங்க‌ அழ‌கு,ச‌க்தி,ச‌ந்தோச‌ம்,ஆயுசு கூடும்.. ஆனா..ஆனா...ஆனா...எடை ம‌ட்டும் குறைஞ்சிடும்,, ஐஸ்வ‌ர்யாராய்'க்கு போட்டியா மாறிடுவீங்க‌ போங்க‌..

திங்கள், 29 மார்ச், 2010

மீன் க‌ட்லெட்




முத‌ல்ல‌ மீன் பொடிமாஸ் இப்ப‌ மீன் க‌ட்லெட்டா.. என்ன‌ கொடும‌ ச‌ர‌வ‌னா'ன் நீங்க‌ த‌லையில‌ அடிச்சுக்க‌ரீங்க‌ளா..டோன்ட் ஃபீல் யா...கூல் பேபி..க‌ட்லெட் ப‌ண்ண‌ ஆர‌ம்பிக்க‌லாமா..


தேவையான‌ பொருட்க‌ள்:


நெய் மீன் -1/4 கிலோ
உருளைக்கிழ‌ங்கு -4
முட்டை -1
ப்ரெட் -4 துண்டு
க‌ர‌ம் ம‌சாலா -1 ஸ்பூன்
மிள‌காய் தூள் -2 ஸ்பூன்
இஞ்சித்துருவ‌ல் -1 ஸ்பூன்
எலுமிச்சை -1 ஸ்பூன்
உப்பு -தேவையான‌ அள‌வு
நெய் -2 ஸ்பூன்
ம‌ல்லித்த‌ழை (ந‌ருக்கிய‌து)- ஒரு கைப்பிடி


செய்முறை:


நெய்மீனை வேக‌ வெச்சு முள் எடுத்துக்க‌னும், உருளைக்கிழ‌ங்கை தோல் உரிச்சி ந‌ல்லா ம‌சிச்சுக்க‌னும், ப்ரெட் துண்டுக‌ளா மிக்சியில‌ பொடிச்சு,மீன்+உருளைக்கிழ‌ங்கு க‌ல‌வையோட‌ சேர்த்து பிசைஞ்சிக்க‌னும்,இப்ப‌ இந்த‌ க‌ல‌வையோட‌ க‌ர‌ம் ம‌சாலா,மிள‌காய் தூள்,,இஞ்சித் துருவ‌ல்,உப்பு முட்டை,எலுமிச்சைச்சாறு,ம‌ல்லித்த‌ழை சேர்த்து பிசைஞ்சு முத‌ல் நாளே ஃப்ரிட்ஜில‌ வெச்சு,ம‌று நாள் வ‌டை மாதிரி த‌ட்டி தோசைக்க‌ல்லுல‌ நெய் விட்டு பொரிச்செடுத்தா..சூப்ப‌ருப்பூ..

ஃபிஷ் பொடிமாஸ்

இத்த‌ன‌ நாள் சைவ‌மா ச‌மைச்ச‌ பொண்ணு அசைவ‌த்துக்கு வ‌ந்துட்டாளே'னு‍ பாக்குறேளா.. என்ன‌ங்க‌ ப‌ண்ணுற‌து..ந‌ண்ப‌ர்க‌ள் சொன்னாங்க‌ அதை முடியாது'னு ம‌றுக்க‌ முடியுமா..ச‌ரி விஷ‌ய‌த்துக்கு வ‌ருவோமா..மீனை எப்ப‌டி ச‌மைச்சாலும் ந‌ல்லாத்தான் இருக்கும்.. உருளைக்கிழ‌ங்கு பொடிமாஸ் ப‌ண்ணிருப்பீங்க‌..ஆனா மீனுல‌ பொடிமாஸ் ப‌ண்ணிட‌லாமா..




தேவையான‌ பொருட்க‌ள்:


மீன் -1/2 கிலோ
மிள‌காய் தூள் -2 ஸ்பூன்
இஞ்சி+பூண்டு விழுது -1ஸ்பூன்
சின்ன‌ வெங்காய‌ம் -1/4 கிலோ
த‌க்காளி -2
எலுமிச்சை -1/2 மூடி
தேங்காய் -3 ஸ்பூன்
ம‌ஞ்ச‌ள் தூள் -2 டீஸ்பூன்
உப்பு -தேவையான‌ அளாவு
எண்ணெய் 3 டீஸ்பூன்
க‌ர‌ம் ம‌சாலா 1 ஸ்பூன்

செய்முறை:


மீனை ந‌ல்லா க‌ழுவி,ம‌ஞ்ச‌ள்,உப்பு சேர்த்து வேக‌ வெச்சு முள்ளெடுத்து உதிர்க்க‌னும். சின்ன‌ வெங்காய‌த்த‌ பொடியா ந‌றுக்கிக்க‌னும்.

வாணலியை அடுப்பில் வெச்சு எண்ணெய் சூடான‌தும் சின்ன‌ வெங்காய‌த்தை போட்டு வ‌த‌க்க‌னும்,வ‌த‌ங்க‌ ஆர‌ம்பிச்ச‌தும்,த‌க்காளி போட்டு கிள‌றி விட‌ ஆர‌ம்பிச்ச‌தும் க‌ர‌ம் ம‌சாலா,மிள‌காய் தூள் சேர்த்து ந‌ல்லா கிள‌றி விட‌னும்,இப்ப‌ இஞ்சி பூண்டு விழுது,உப்பு சேர்த்து ப‌ச்சை வாச‌னை போகுற‌ வ‌ரை வ‌த‌க்க‌னும்,அடுப்பை லேசான‌ தீயில‌ வெச்சுக்க‌னும்.

க‌டைசியா உதிர்த்து வெச்சிருக்குற‌ மீன‌ உதிரி,உதிரியா போட்டு கிள‌றி விட‌னும்,,என்ன‌ க‌ம‌ க‌ம‌ ம‌ண‌ம் வ‌ருதா,,ஆனா ஒண்ணு ப‌ரிமாரும்போது ம‌ற‌க்காம‌ எலுமிச்சை 2 சொட்டு விட்டு,தேங்காய் துருவ‌லை தூவி விட்டு சாப்பிட‌னும்,,வேணும்னா ந‌றுக்கின‌ ம‌ல்லித்த‌ழையை தூவினா க‌ல‌ர்ஃபுல்லா இருக்கும்.

குறிப்பு:
கார‌மா வேணும்னா மிள‌குத்தூள் சேர்த்துக்க‌லாம்.

மோர் குழ‌ம்பு

வெயில் ஆர‌ம்பிச்சிடுச்சி,, ம‌னுஷ‌ன் வெளியே த‌லைய‌ காட்ட‌ முடிய‌ல‌ போங்க‌.மோர்,த‌யிர்,த‌ர்பூச‌ணி,வெள்ள‌ரிக்காய் வியாபார‌ம் சூடு பிடிக்க‌ ஆர‌ம்பிச்சிடுச்சி. அத‌னால‌ ரொம்ப‌ சிம்பிளான‌,ஆனா ப‌ய‌ங்க‌ர‌ ப‌ய‌னுள்ள‌ மோர்குழ‌ம்பு தான் செய்ய‌ப்போறேன்.. ச‌ரி வாங்க‌ கிச்ச‌னுக்குள்ள‌ போக‌லாமா..பேர் தான் மோர் குழ‌ம்பே த‌விர‌ த‌யிர் ப‌ய‌ன் ப‌டுத்தினா தான் சூப்ப‌ரா இருக்கும்.



தேவையான‌ பொருட்க‌ள்:


த‌யிர் -1 க‌ப்
தேங்காய் துருவ‌ல் -1/2 க‌ப்
சீர‌க‌ம் -2 டேஸ்பூன்
ப‌ச்ச‌ மிள‌காய் -3
உப்பு -தேவையான‌ அள‌வு

கொத்த‌ம‌ல்லித்த‌ழை (ந‌றுக்கின‌து)-கொஞ்ச‌ம்

தாளிக்க‌:

எண்ணெய்- 2 ஸ்பூன்
க‌டுகு -1/2 டீஸ்பூன்
க‌ருவேப்பிலை -கொஞ்ச‌மா


செய்முறை :

தயிரை மிக்ஸியில் போட்டு ந‌ல்லா அடிச்சுக்க‌னும்.இப்ப‌ தேங்காய்,ப‌ச்ச‌ மிள‌காய், சீர‌க‌ம்,ம‌ஞ்ச‌ள் பொடி எல்லாம் சேர்த்து கொஞ்ச‌ம் ந‌ல்லாவே அரைச்சிக்க‌னும்.

வாண‌லியில‌ எண்ணெயை சூடாக்கி க‌டுகு,சீர‌க‌ம்,க‌ருவேப்பிலை சேர்த்து தாளிச்சிக்க‌னும்.
அதோட‌ அரைச்ச‌ விழுதை சேர்த்து ந‌ல்லா ப‌ச்சை வாச‌னை போகுற‌ வ‌ரை ந‌ல்லா கிள‌ர‌னும்,ஒரு க‌ப் த‌ண்ணீர் சேர்த்துக்க‌லாம்,இப்ப‌ அரைச்ச‌ விழுதும்,த‌ண்ணீரும் சேர்ந்து கொதிச்சி வ‌ரும்போது த‌யிரை சேர்க்க‌னும்,தேவையான‌ அள‌வு உப்பு சேர்த்து க‌ல‌ந்துக்க‌னும்.இப்ப‌ த‌யிர் சேர்க்குற‌ நேர‌த்துல‌ அடுப்பை சிம்'மில‌ வெச்சுக்க‌னும், க‌டைசியா ந‌றுக்கின‌ ம‌ல்லித்த‌ழையை சேர்த்தா மோர்க்குழ‌ம்பு ரெடி.

மோர் குழ‌ம்போட‌ அவிச்சு வெச்ச‌ த‌டிய‌ங்காய்,வ‌த‌க்கின‌ வெண்டைக்காய் இப்ப‌டி எந்த‌ காயை வேணும்னாலும் சேர்த்துக்க‌லாம்.

சனி, 27 மார்ச், 2010

ஆர‌ஞ்ச் சூஃப்ளே:


ப‌ழ‌ங்க‌ள்ள‌ ம‌ட்டும் தான் எல்லா ச‌த்துக்க‌ளும் நிறைஞ்சிருக்கு.அதுல‌யும் ஆர‌ஞ்ச் ப‌ழ‌ம் பெஸ்ட்‍னு சொல்ல‌லாம்.ஒரு ஆர‌ஞ்ச் ப‌ழ‌ம் மூனு க‌ப் பாலுக்கு ச‌ம‌ம்.ஆர‌ஞ்ச் தோலில் இருந்து புற்று நோய்க்கான‌ ம‌ருந்துக‌ள் த‌யாரிக்க‌ப்ப‌டுது.இத‌ய‌ நோயாளிக‌ள் ஆர‌ஞ்ச் சாறா குடிக்க‌லாம்.

ஆர‌ஞ்ச் ப‌ழ‌த்துல‌ விட்ட‌மின் சி,சோடிய‌ம்,பொட்டாசிய‌ம்,ம‌ங்க‌னீசிய‌ம்,காப்ப‌ர்,ச‌ல்ஃப‌ர்,குளோரின் எல்லாம் இருக்கு.ஆர‌ஞ்ச் சாறு குடிச்சா உட‌னே ச‌க்தி கிடைக்கும்.





ஆர‌ஞ்ச் சூஃப்ளே:

பேர் கேட்டா சீன‌ ரெசிபியோ‍‍னு நினைக்காதீங்க‌.ந‌ம‌ ஊருல‌ உள்ள‌து தான்.

தேவையான‌ பொருட்க‌ள்:
ஆர‌ஞ்ச் 6(ஜூஸ் எடுத்து ரெடியா வெச்சுக்க‌னும்)

முட்டை 2

பொடித்த‌ சீனி 1 க‌ப்

ஃப்ரெஸ் க்ரீம் 2 க‌ப்

ஆர‌ஞ்ச் ப‌ழ‌ச்சுளை 1 க‌ப்

ஆர‌ஞ்ச் எசென்ஸ் 2 டீஸ்பூன்

ஆர‌ஞ்ச் க‌ல‌ர் 1/2 டீஸ்பூன்

ஆர‌ஞ்ச் ஜெல‌ட்டின் 10 கிராம்


செய்முறை:


முட்டையை ம‌ஞ்ச‌ள் க‌ரு த‌னியாக‌வும்,வெள்ளைக்க‌ருவை த‌னியாக‌வும் பிரிச்சுக்க‌னும்.ம‌ஞ்ச‌ள் க‌ருவையும்,1 க‌ப் சீனியையும் ஒண்ணா அடிச்சுக்க‌னும்.

அடுப்பில் ஒரு வாய‌க‌ன்ற‌ பாத்திர‌த்துல‌ த‌ண்ணீர் கொதிக்க‌ விட‌னும்,இப்ப‌ ம‌ஞ்ச‌ள் க‌ரு+சீனி க‌ல‌வையோட‌ பாலையும் சேர்த்து அதை ஒரு கிண்ன‌த்துல‌ ஊற்றி கொதிச்சிட்டிருக்கிற‌ த‌ண்ணியுள்ள‌ பாத்திர‌த்துக்குள்ள‌ வெச்சு க‌ர‌ண்டியால‌ கிள‌ரி விட‌னும்.

இப்ப‌ அடுப்பில் இருந்து கீழே க‌ல‌வையை எடுத்து வெச்சிட்டு அதோட‌ க்ரீமை கொட்டி ந‌ல்லா அடிச்சுக்க‌னும்.அதுக்க‌ப்புற‌மா ஒரு ட‌ம்ள‌ருல‌ ஆர‌ஞ்ச் ஜெல‌ட்டினோட‌ கொஞ்ச‌மா வெந்நீர் க‌ல‌ந்து கொதிக்குற‌ த‌ண்ணீர் உள்ள‌ பாத்திர‌த்துல‌ வெக்க‌னும்,இப்ப‌டி க‌ரைச்ச‌ ஜெல‌ட்டினையும்,முட்டை வெள்ளைக்க‌ருவையும் ரெடியா இருக்க‌ற‌ ம‌ஞ்ச‌ள் க‌ரு +சீனி+க்ரீம் க‌ல‌வையோட‌ சேர்த்து ந‌ல்லா அடிச்சுக்க‌னும்

க‌டைசியா ஆர‌ஞ்ச் க‌ல‌ர்,ஆர‌ஞ்ச் எசென்ஸ்,ஆர‌ஞ்ச் ப‌ழ‌த்துண்டுக‌ளையும் க‌ல‌ந்து ஒரு பாத்திர‌த்துல‌ வெச்சு ஃப்ரிட்ஜ்ஜில் 4 அல்ல‌து 6 ம‌ணி நேர‌ம் செட் ப‌ண்ணினா ஆர‌ஞ்ச் சூஃபி ரெடி.

வெள்ளி, 26 மார்ச், 2010

குழ‌ந்தை வ‌ர‌ம் த‌ரும் சூப்புக‌ள்

குழ‌ந்தைப் பேறுங்குற‌து ம‌ழை பெய்ய‌ற‌ மாதிரி,வெயில் அடிக்கிற‌ மாதிரியான‌ இய‌ற்கை நிக‌ழ்வு,,அதை ம‌ன‌சுல‌ கொண்டு தான் இய‌ற்கை ஆணையும்,பெண்ணையும் அதுக்கேத்த‌ மாதிரி டிசைன் ப‌ண்ணியிருக்கு,

ஆணுக்கும் ச‌ரி,பெண்ணுக்கும் ச‌ரி ம‌க‌ப்பேறு உருவாகாத‌ நிலைக்கு அடிப்ப‌டை கார‌ண‌ம் கிருமிக‌ள் தான்,இந்த‌ உட‌ல் சூட்டையும்,கிருமிக‌ளையும் ச‌ரி செய்ய‌ இதோ ஸ்பெஷ‌ல் சூப்புக‌ள்..



1.ப‌ச‌லை சூப்

ப‌ச‌லை கீரையை ஒரு கைப்பிடி எடுத்து ந‌ல்லா அல‌சி ந‌றுக்கிக்க‌னும்,அதுல‌ ஒரு சிட்டிகை பெருஞ்சீர‌க‌த்தை வ‌றுத்துப் போட்டு அதை ரெண்டு ட‌ம்ள‌ர் த‌ண்ணீருல‌ கொதிக்க‌ வெச்சு வ‌டி க‌ட்டி எடுத்தா ப‌ச‌லை சூப் ரெடி..

2.வேப்பிலை சூப்:



வேப்பிலை கொழுந்தை ஒரு கைப்பிடி அள‌வு எடுத்து அல‌சி கொதிக்க‌ வெச்சு ஒரு ட‌ம்ள‌ர்ல‌ எடுத்தா வேப்பிலை சூப் ரெடி,இதை குடிக்கிற‌தால‌ உட‌ல் சூடு குறைய‌ற‌தோட‌ கிருமியும் சாகும்.

3.செம்பருத்தி சூப்:



சிவ‌ப்பு நிற‌மா இருக்க‌ற‌ ஒத்தை இலை செம்ப‌ருத்திப்பூ ஐந்து எடுத்து ந‌ல்லா சுத்த‌ம் செஞ்சு ஒரு ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் ஊற்றி அவித்து,ஒரு க‌ர‌ண்டியால‌ அதை ஒரு க‌ச‌க்கு க‌ச‌க்கிய‌ பிற‌கு அந்த‌ த‌ண்ணீர‌ வ‌டிக‌ட்டி ஆற‌ வெச்சு கொஞ்ச‌ம் பால் சேர்த்தா செம்ப‌ருத்தி சூப் ரெடி,இந்த‌ சூப் உட‌லுக்கு ந‌ல்ல‌ குளிர்ச்சி த‌ரும்.

4.முருங்கை சூப்:



முருங்கை இலைஒரு கைப்பிடி எடுத்து அல‌சி அதை ஒரு ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் ஊற்றி கொதிக்க‌ வெச்சி வ‌டி க‌ட்டினா முருங்கை சூப் ரெடி,இது உட‌ம்போட‌ வாய்வையும் குறைக்கு,.நெஞ்சு வ‌லி வ‌ர‌வே வ‌ராது.

5.க‌ல்யாண‌ முருங்கை சூப்:



க‌ல்யாண‌ முருங்கை இலையை ஒரு கைப்பிடிஎடுத்து அதோட‌ கொஞ்ச‌ம் பெருஞ்சீர‌க‌ம் போட்டு ஒரு ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் ஊற்றி கொதிக்க‌ வெச்சு வ‌டி க‌ட்டி எடுத்தா க‌ல்யாண‌ முருங்கை சூப் ரெடி,இத‌னால‌ ம‌ல‌ட்டுத்த‌ன்மை வ‌ராது.


5.கொத்தும‌ல்லி சூப்:



கொத்தும‌ல்லி த‌ழைக‌ளை ஒரு கைப்பிடி ஆய்ந்து ந‌ல்லா அல‌சி ஒரு ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் விட்டு கொதிக்க‌ வெச்சு ஆற‌வெக்க‌னும்,அப்புற‌மா அரை ட‌ம்ப‌ர் பால் சேர்த்தா கொத்த‌ம‌ல்லி சூப் ரெடி .இது ப்ரெஷ்ஷ‌ரை குறைக்கும்,ச‌ட்டு,ச‌ட்டுனு வ‌ருகிற‌ ந‌ப‌ர்க‌ள் இதை தின‌மும் குடிக்க‌னும்,அப்புற‌ம் பாருங்க‌ மாற்ற‌த்தை..

6.க‌ருவேப்பிலை சூப்:



க‌ருவேப்பிலையை ஒரு கைப்பிடி எடுத்து அல‌சி கொதிக்க‌வெச்சு ஆற‌ வெச்சு வ‌டி க‌ட்டி அரை ட‌ம்ள‌ர் பால் சேர்த்து எடுத்தா க‌ருவேப்பிலை சூப் ரெடி,பால் சேர்க்காம‌லும் குடிக்க‌லாம்,இந்த‌ சூப் பித்த‌த்தை குறைக்கும்,வ‌யிற்றுப் புண்ணை ஆற்றும்,மூளைக் கோளாறு உள்ள‌வ‌ங்க‌ சாப்பிட்டா சீக்கிர‌மா ச‌ரியாகும்‌ .


7.வாழைப்ப‌ழ‌ சூப்:



மொந்த‌ன் வாழைப்ப‌ழ‌த்தை தோலோடு துண்டு துண்டா ந‌ருக்கி,பிச‌ஞ்சிட்டு 2 ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் விட்டு கொதிக்க‌ வைக்க‌னும்,அதை அப்ப‌டியே வ‌டி க‌ட்டி குடிக்க‌லாம்,இதுல‌ விட்ட‌மின் எ,பி,சி,டி இருக்கு,ஆண்க‌ள் குறிப்பா ஹார்ட் அட்டாக் பிர‌ச்சினை உள்ள‌வ‌ங்க‌ளுக்கு ந‌ல்ல‌து,ஆனா டிபி,ஆஸ்துமா உள்ள‌வ‌ங்க‌ இதை குடிக்க‌க்கூடாது.

8.பொன்னாங்க‌ன்னி சூப்:




ச‌ர்க்க‌ரை நோய் உள்ள‌வ‌ங்க‌ வாழைப்ப‌ழ‌ சூப் சாப்பிட‌ முடியாதுங்குற‌துனால‌ பொன்னாங்க‌ன்னி,தொட்டாச்சினுங்கி ரெண்டையும் ச‌ம‌ ப‌ங்கு எடுத்து ஒரு ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் விட்டு கொதிக்க‌ விட்டு அதுல‌ ஒரு துளி வ‌றுத்த‌ வெந்த‌ய‌ப்பொடி,துளி பாக்குப்பொடி,ஒரு துளி ம‌ஞ்ச‌ள் தூள் சேர்த்து வ‌டி க‌ட்டி குடிச்சா இப்ப‌ பொன்ன‌ங்க‌ன்னி சூப் ரெடி.க‌ளி பாக்கு கிருமியை நீக்கிடும்.

ப்ரிஞ்ஜால் ம‌சாலா ஃப்ரை


க‌த்திரிக்காய் வெச்சு ஸ்பெஷ‌லா என்ன‌ ப‌ண்ண‌லாம்னு யோசிக்கும்போது கிடைச்ச‌து தான் இந்த‌ க‌த்த‌ரிக்காய் ம‌சாலா ஃப்ரை.




தேவையான‌ பொருட்க‌ள்:

வெங்காய‌ம் 1 (பொடியாக‌ ந‌றுக்கிய‌து)
த‌க்காளி 1 (பொடியாக‌ ந‌றுக்கிய‌து)
இஞ்சி விழுது 1/2 டீஸ்பூன்
பூண்டு விழுது 1/2 டீஸ்பூன்
ப‌ச்ச‌ மிள‌காய் 2
க‌ர‌ம் ம‌சாலா 1/2 டீஸ்பூன்
மிள‌காய் தூள் 1/2 டீஸ்பூன்
ம‌ஞ்ச‌ள் தூள் 1/4 டீஸ்பூன்
பெருங்காய‌ப்பொடி சிறித‌ள‌வு
வெந்த‌ய‌ம்,பெருஞ்சீர‌க‌ம் 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
ரீஃபைன்ட் ஆயில் 1ஸ்பூன்
உப்பு தேவையான‌ அள‌வு

செய்முறை:

க‌த்திரிக்காயை முழுசா காம்பு ந‌றுக்காம‌ ரெண்டா வெட்டி,தீயில‌ சுட்டு தோல் உரிச்சி ஆற‌ வெக்க‌னும்,லேசான‌ தீயில‌ வாண‌லியை வெச்சு எண்ணெயில‌ பெருஞ்சீர‌க‌ம் + வெந்த‌ய‌ம் தாளிச்சி அதோட‌ பெருங்காய‌ம்,இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து ப‌ச்சை வாச‌னை போக‌ வ‌த‌க்க‌னும்,இப்ப‌ ந‌றுக்கின‌ வெங்காய‌ம்,த‌க்காளியை ஒண்ணு பின்னால‌ ஒண்ணா போட்டு வ‌த‌க்கி அதோட‌ 1 ஸ்பூன் க‌ர‌ம் ம‌சாலா,தேவையான‌ அள‌வு உப்பு,ரெண்டா வெட்டின‌ ப‌ச்ச‌ மிள‌காயும் சேர்த்து வ‌த‌க்க‌னும்,இப்ப‌ தீயில‌ சுட்டு உரிச்சி வெச்சிருக்க‌ற‌ க‌த்திரிகாயையும்,1ஸ்பூன் லெமொன் சேர்த்து ந‌ல்லா பிர‌ட்டி கொஞ்ச‌மா த‌ண்ணீர் சேர்த்து கொதிக்க‌ விட‌னும்,ந‌ல்லா த‌ள‌,,த‌ள‌னு கொதிச்சு வ‌ரும்போது ந‌றுக்கி வெச்சிருக்க‌ற‌ கொத்த‌ம‌ல்லித் த‌ழையை தூவி இற‌க்கினா ப்ரிஞ்ஜால் ம‌சாலா ஃப்ரை ரெடி,,அப்பா செம‌ ம‌ண‌ம் போங்க‌..இது ஃப்ரைட் ரைஸ்,ப்ரோட்டா,ரைஸ் ரொட்டிக்கு ந‌ல்ல‌ காம்பினேஷ‌ன்..

ஆப்பிள் அல்வா

தின‌மும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டா டாக்ட‌ர் கிட்ட‌ போக‌ வேண்டிய‌ தேவையே வ‌ராது'னு சொல்லுவாங்க‌..அப்ப‌டிப்ப‌ட்ட‌ ஆப்பிள் வெச்சுத்தான் அல்வா செய்ய‌ப் போகிறேன்.



தேவையான‌ பொருட்க‌ள்:

ஆப்பிள் 1/2 கிலோ
கோதுமை மாவு 1/2 கிலோ
ச‌ர்க்க‌ரை 1 கிலோ
பால் 1/2 கிலோ
நெய் 1/4 லிட்ட‌ர்
ஏல‌க்காய் தூள் 1 ஸ்பூன்
முந்திரிப்ப‌ருப்பு 15
கேச‌ரிப்ப‌வுட‌ர் 2 ஸ்பூன்

செய்முறை:


ஆப்பிளை சின்ன‌ சின்ன‌ துண்டா ந‌றுக்கி லேசா சூடான‌ பால் விட்டு வேக‌ வைக்க‌னும்,ஆப்பிள் வெந்த‌தும் அடுப்பை லேசா "சிம்"மில் வெச்சிட்டு ந‌ல்லா ம‌சிக்க‌னும்.ம‌சிச்ச‌தும் ச‌லித்த‌ கோதுமை மாவு,சேர்த்து கிள‌ரி விட‌னும்,இப்ப‌ ச‌ர்க்க‌ரை,கேச‌ரிப்ப‌வுட‌ர் சேர்த்து ந‌ல்லா க‌ல‌வையை கிண்டி விட‌னும்,,இப்ப‌ நெய்யை கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா ஊற்றி ஊற்றி அல்வாவை கிள‌ரி விட்டுக்கிட்டே இருக்க‌னும்,அல்வா ப‌த‌ம் வ‌ந்த‌தும் முந்திரிப்ப‌ருப்பு,ஏல‌க்காய் தூளும் சேர்த்து அடுப்பிலிருந்து இற‌க்கி எடுத்தா ஆப்பிள் அல்வா ரெடி..

பாதாம் அல்வா

திருநெல்வேலி"னு சொன்ன‌வுட‌னே எல்லாஅருடைய‌ ம‌ன‌சுக்குள்ள‌யும் எட்டி பாக்குற‌து,நாக்குல‌ த‌ண்ணீர் வ‌ர‌ வைக்கிற‌ அல்வா தான்..ஆஹா..எப்ப‌டி இருக்கும் தெரியுமா..அட‌டா..டேஸ்டோ,டேஸ்ட் போங்க‌..நெல்லை ட‌வுண் இருட்டுக்க‌டை அல்வாவுக்கு இணை எதுவுமே இல்ல‌..அப்ப‌டியே இலையில‌ சுட‌ சுட‌ வாங்கி நாக்குல‌ ப‌ட்டும் ப‌டாம‌லும் "ம்லுக்"னு வ‌யித்ட்துக்குள்ள‌ போகும் பாருங்க‌..அட‌டா..
இப்டி இருந்தாலும் வித்யாச‌மான‌ அல்வா செய்ய‌லாம்னு தோணிடுச்சி,,செஞ்சும் பார்த்துட்டேன்..அது என்ன‌ன்னா ந‌ம்ம‌ "பாதாம் அல்வா"தான்..பாதாம் விக்குற‌ விலையில‌ இது தேவையானு நீங்க‌ கேக்குற‌து என‌க்கு கேக்குது..இருந்தும் செஞ்சு குடுத்தா வேணாம்னா சொல்லுவோம்..




தேவையான‌ பொருட்க‌ள்:

பாதாம் ப‌ருப்பு 1 க‌ப்
இனிப்பில்லாத‌ கோவா 1 க‌ப்
பொடித்த்ட‌ ச‌ர்க்க‌ரை (சுக‌ர்) 1 1/2 க‌ப்
நெய் 1/4 க‌ப்
குங்கும‌ப்பூ 1/4 ஸ்பூன்
பால் 1/2 க‌ப்
ஏல‌க்காய் தூள் 1/4 ஸ்பூன்

செய்முறை:

முத‌ல்ல‌ பாதாம் ப‌ருப்புக‌ளை 15 நிமிஷ‌ம் சூடானா வெந்நீருல‌ போட்டு ஊற‌ வெச்சு தோல் உறிச்சு எடுத்து அதோட‌ பால் சேர்த்து அரைச்சு கோவா கூட‌ சேர்த்து க‌ல‌ந்துக்க‌னும்,இப்ப‌ அடுப்ப‌ ப‌த்த வெச்சு பாதாம்+கோவா க‌ல‌வையை சேர்த்து ந‌ல்லா கிள‌ர‌ ஆர‌ம்பிக்க‌னும். அதோட‌ மீத‌மிருக்க‌ற‌ பால் சேர்த்து கிள‌ரி விட‌னும்.பால் சுண்ட‌ ஆர‌ம்பிச்ச‌தும் 1 1/2 க‌ப் பொடித்த‌ சீனி சேர்க்க‌னும்,அது நல்லா கரைந்தவுடனே கேச‌ரி பவுடர் சேர்த்து, 1/4 டம்ளர் நெய்யை ஊற்ற‌னும். இப்ப‌ பாலுல‌ க‌ரைச்ச‌ குங்கும‌ப்பூ,ஏல‌க்காய் ப‌வுட‌ர் க‌ல‌ந்த‌தும் நல்லா கெட்டியாகி அல்வாப் பதத்தில வரும்போது, இறக்கி வெச்சு மீதி நெய்யை கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா விட்டு நல்லா கிளறி ஆறவிடனும்.இப்ப‌ பாதாம் அல்வா ரெடி..

செவ்வாய், 23 மார்ச், 2010

த‌க்காளி வெங்காய‌ம் ஊறுகாய்




பொண்ணு பார்த்துட்டு வ‌ர்ற‌வுக‌,அல்ல‌து க‌ல்யாண‌ த‌ர‌க‌ர் கிட்ட‌ பொண்ணு எப்ப‌டி இருக்குனு கேட்டா போதும் ,,,உட‌னே பொண்ணு த‌க்காளி மாதிரி த‌ள‌ த‌ள‌னு இருக்குறானு சொல்லுவாங்க‌..இப்ப‌டி ப‌ட்ட‌ த‌க்காளிய‌ ஆர‌ம்ப‌த்துல‌ வேண்டாத‌ பொருளா,விஷ‌ ப‌ழ‌மா தான் பார்த்தாங்க‌ளாம்..அதுக்க‌ப்ப்ற‌மா ப‌ஞ்ச‌ம் வ‌ந்த‌ ச‌ம‌ய‌த்துல‌தான் வேற‌ வ‌ழி இல்லாம‌ த‌க்காளிப்ப‌ழ‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்த‌ ஆர‌ம்பிச்சாங்க‌ளாம் ந‌ம்ம‌ ம‌க்க‌ள்... இப்டி எல்லாம் நிறைய‌ க‌தைக‌ள் த‌க்காளிக்கு உண்டு,,இப்ப‌டி ப‌ட்ட‌ தக்காளியோட‌ வெங்காய‌ம் சேர்த்து என்ன‌ ச‌மைய‌ல் செஞ்சாலும் சூப்ப‌ர் தான்,,ஏன்னா இவ‌ங்க‌ ரெண்டு பேரும் சேர்ந்தா தான் நிறைய‌ கிரேவி கிடைக்கும்..இப்ப‌டியான‌ த‌க்காளி,வெங்காய‌ம் சேர்த்த நான் உங்க‌ எல்லாருக்கும் ஒரு ஊருக்காய் செஞ்சி த‌ர‌லாமுனு நினைக்கிறேன்..


தேவையான பொருட்கள்:

தக்காளி - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் ‍ 2
பூண்டு 10 ப‌ல்
ந‌ல்லெண்ணைய் ‍ 1/4 லிட்ட‌ர்
வ‌த்த‌ல் தூள் - 50 கிராம்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
பெருங்காய பொடி ‍1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை:

தக்காளியை லேசா‌ எண்ணெய் விட்டு வ‌த‌க்கி மிக்ஸியில‌ ந‌ல்லா அரைச்சி வ‌டிக‌ட்டிக்க‌னும்,ஏன்னா ச‌க்கை இருந்தா ந‌ல்லா இருக்காதுல்ல‌.வெங்காயத்தையும்,பூண்டையும் வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வ‌த‌க்கி அதையும் அரைச்சிக்க‌னும்.அடுப்பில‌ ந‌ல்லெண்ணெய‌ ஊற்றி க‌டுகு,வெந்த‌ய‌ம் தாளிச்சி அதோட‌ த‌க்காளி+வெங்காய‌ம் பூண்டு விழுது சேர்த்து ப‌ச்சை வாச‌னை போக‌ வ‌த‌க்க‌னும்,இப்ப‌ அதோட‌ சிவ‌ந்த‌ நிற‌ வ‌த்த‌ல் தூள்,ம‌ஞ்ச‌ள் தூள்,பெருங்காய‌ப்பொடியை ஒண்ணு பின்னால‌ ஒண்ணா சேர்த்து தேவையான‌ அளவு உப்பு சேர்த்து லேசா வ‌த‌க்கி 10 நிமிஷ‌ம் அடுப்பை "சிம்"மில‌ வெக்க‌னும்.மீத‌ம் இருக்க‌ற‌ எண்ணெயை ஊற்றி லேசா சுருள‌ வேக‌வெச்சி 10 நிமிஷ‌ம் ஆற‌ வெச்சா த‌க்காளி வெங்காய‌ம் ஊறுகாய் ரெடி..

ஆந்திரா த‌க்காளி கார‌ ச‌ட்னி


ந‌க‌மும்,ச‌தையும் மாதிரி,பூவும் நாரும் மாதிரி,க‌ண‌வ‌னும் ம‌னைவி மாதிரி தான் இட்லியும் ச‌ட்னியும்,ச‌ரியான‌ பொருத்தம்.என்ன‌தான் தேங்காய் ச‌ட்னி,தேங்காய் பொட்டுக்க‌ட‌லை ச‌ட்னி,த‌க்காளி ச‌ட்னி,புதினா ச‌ட்னி,கொத்தம‌ல்லி ச‌ட்னி சாப்பிட்டாலும் இன்னும் கொஞ்ச‌ம் நாக்குக்கு ருசியான‌ கார‌சார‌மான‌ ச‌ட்னியை செஞ்சா யாராவ‌து வேணாம்னு சொல்லுவாங்க‌ளா ம்ஹூம்..
இப்ப‌ நான் உங்க‌ எல்லாருக்கும் ஆந்திரா த‌க்காளி ச‌ட்னி செஞ்சி த‌ர‌ட்டுமா..இதை க‌த்துக்கொடுத்த‌து என் சின்ன‌ வ‌ய‌சு பெரிய‌ வ‌ய‌சு தோழி சுபாக்கா..இப்ப‌ அவ‌ங்க‌ சென்னையில‌...




தேவையான‌ பொருட்க‌ள்:


த‌க்காளி - 1/2 கிலோ
புளி - எலுமிச்சை அள‌வு
பூண்டு - 2 ப‌ல்
காய்ந்த‌ மிள‌காய் (வ‌த்த‌ல்) - 7 (கார‌ம் வேணும்னா இன்னும் சேர்த்துக்க‌லாம்)
உப்பு தேவையான‌ அள‌வு


தாளிக்க‌:

ரீஃபைண்ட் ஆயில் - 2ஸ்பூன்
க‌டுகு - 1டீஸ்பூன்
க‌ருவேப்பிலை - சிறிது


செய்முறை:

முத‌ல்ல‌ த‌க்காளி+புளி ரெண்டையும் கொஞ்ச‌மா த‌ண்ணீர் சேர்த்து ந‌ல்லா அவிச்சி எடுத்து ஆற‌ வெச்சுக்க‌னும்,இப்ப‌ வ‌ர‌ மிள‌காய்,பூண்டு,ரெண்டையும் லேசான‌ எண்ணெய் விட்டு வ‌றுத்து எடுத்துக்க‌னும்,இப்ப‌ மிக்ஸியில‌ அவிச்சி எடுத்த த‌க்காளி,புளி,வ‌றுத்தெடுத்த‌ வ‌த்த‌ல்,பூண்டு,கொஞ்ச‌ம் உப்பு சேர்த்து ந‌ல்லா அரைச்சுக்க‌னும்,,

இப்ப‌ வாணாலியில‌ எண்ணெய் விட்டு க‌டுகு,க‌ருவேப்பிலை தாளிச்சி அதுல‌ அரைச்ச‌ விழுது சேர்த்து லேசா த‌ள‌ த‌ள‌ வ‌ந்த‌தும் சூடா எடுத்தா ஆந்திரா த‌க்காளி கார‌ ச‌ட்னி ரெடி...

செவ்வாய், 16 மார்ச், 2010

இஞ்சி வ‌ட‌க‌ம்


நான் குட்டி பொண்ணா இருக்கும்போது எங்க‌ கிராம‌த்துல‌ ஓவ‌ரா சிலுப்பிக்கிட்டு திரிய‌ற‌வுக‌ள‌ பார்த்து ஒரு க‌த‌ சொல்லுவாக‌,அது என்ன‌ தெரியுமா..

ஒரு ஊருல‌ ஒருத்தி காதுல‌ புதுசா பாம்ப‌ட‌ம் போட்டிருந்தாளாம்,,உட‌னே அத‌ போட்டுக்கிட்டு திரியும்போது யாருமே என்னான்னே கேக்க‌ல‌யாம்,,உட‌னெ ஊரு ச‌ன‌மெல்லாம் கூடுற‌ அந்த‌ ஊரு க‌டைக்குப்போயி ஏ! க‌ட‌க்கார‌ரே உங்க‌ க‌டையில‌ சுக்கு இருக்கா,இல்லியானு சுக்குனு த‌லைய‌ ஆட்டி ஆட்டி கேட்டாளாம்..இத‌ பார்த்து அங்கே புதுசா வ‌ளைய‌ல் போட்டுருந்த‌வ‌ என்ன‌ ப‌ண்ணினா தெரியுமா,இந்தா க‌ட‌க்கார‌ரே க‌டையில‌ தேங்கா இருக்கானு ரெண்டு கையையும் உருட்டி உருட்டி கேட்டாளாம்..இதை எல்லாம் பார்த்துக்கிட்டு இருந்த‌ புதுசா த‌ங்க‌ ப‌ல் க‌ட்டின‌வ‌ அட‌டா நாம‌ எப்ப‌டி ஊரு ச‌ன‌த்துக்கு ந‌ம்ம‌ த‌ங்க‌ ப‌ல்ல‌ இந்த‌ ஊரு ச‌ன‌ங்க‌ளுக்கு எப்புடி காட்டிற‌துனு ஒரே யோச‌னையா இருந்தாளாம்..அப்ப‌ தான் ஒரு யோச‌ன‌ தோனிச்சாம்..க‌ட‌க்கார‌ர் கிட்ட‌ போய்,இந்தா இஞ்சி இருக்கா இஞ்சின்னு பல்ல "ஈ"னு காட்டினாளாம்..என்ன‌ நீங்க‌ளும் சொல்லி பாக்குறீக‌ளா...ம்ம்..அவ்வ‌ள‌வு சிற‌ப்பான‌ இஞ்சியில‌ தான் உங்க‌ எல்லாருக்கும் வ‌ட‌க‌ம் செஞ்சி த‌ர‌ப்போறேன்..ஆனா சின்ன‌ வ‌ய‌சுல‌ இஞ்சி சாறுனா ஒரே ஓட்ட‌ம் தான்,,அம்மா தேடும்போது ஒழிஞ்சிக்குவேன்..

தேவையான‌ பொருட்க‌ள்:

இஞ்சி – 1/4 கிலோ
சுக்கு – 25 கிராம்
மிளகு – 25 கிராம்
திப்பிலி – 25 கிராம்
உப்பு – தேவையான‌ அள‌வு
மல்லி – 25 கிராம்
ஓமம் ‍ 25 கிராம்
கடுக்காய் ‍ 25 கிராம்
லவங்கம் ‍ 25 கிராம்
த‌யிர் 100 மில்லி

செய்முறை:

நான் மேல‌ சொல்லிருக்க‌ற‌ தேவையான‌ எல்லா பொருட்க‌ளையும் கொஞ்ச‌ம் நெய்விட்டு பொன்னிற‌மா வ‌றுத்து அதெல்லாத்தையும் த‌யிர் சேர்த்து அரைச்சிக்க‌னும்.இப்ப‌ சின்ன‌ சின்ன‌ உருண்டைக‌ளாக்கி லேசான‌ வெயில்ல‌ காய‌ வெச்சி எடுத்துக்க‌லாம்..இதை வ‌யிரு ச‌ரி இல்லாம‌ இருக்குற‌ ச‌ம‌ய‌த்துல‌ கொஞ்ச‌ம் நீத்து த‌ண்ணி குடிச்சி சாப்பிட‌லாம்,,இல்லாட்டி எண்ணெயில‌ பொறிச்செடுத்து சாத‌த்துக்கு வெச்சி சாப்பிட‌லாம்..ந‌ல்லா இருக்கும்,,சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க‌..

திங்கள், 15 மார்ச், 2010

வெள்ள‌ரிக்காய் வெஜிட‌பிள் சால‌ட்

சால‌ட் எப்ப‌வுமே உட‌ம்புல‌ கொழுப்பு சேராம‌ பார்த்துக்கும்,,இப்ப‌ வெயில் கால‌ம் ஆர‌ம்பிச்சாச்சுல‌.வெள்ள‌ரி சீச‌னும் ஆர‌ம்பிச்சாச்சு..உட‌லுக்கு குளிர்ச்சியான‌து ,,இதை குட்டி ப‌ச‌ங்க‌ள‌ள‌ இருந்து பெரிய‌வ‌ங்க‌ வ‌ரைக்கும் சாப்பிட‌லாம்..த‌யாரிக்க‌ ஆர‌ம்பிக்க‌லாமா.




தேவையான‌ பொருட்க‌ள்:

வெள்ள‌ரிக்காய் - 50 கிராம்
த‌க்காளி - 50 கிராம்
வெங்காய‌ம் - 50 கிராம் (பொடியா ந‌றுக்கின‌து)
மாங்காய் - 10 கிராம் (பொடியா ந‌றுக்கின‌து)
கேர‌ட் - 50 கிராம்
முள்ள‌ங்கி - 20 கிராம்
புதினா - 10 கிராம்
கொத்த‌ம‌ல்லித் த‌ழை - 10 கிராம்
மிள‌குத்தூள் - 1 ஸ்பூன்
க‌ருப்பு உப்பு - தேவையான‌ அள‌வு
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
ப‌ச்சை மிள‌காய் - 3


செய்முறை:

வெள்ள‌ரிக்காய்,கேர‌ட்,முள்ள‌ங்கி எல்லாத்தையும் ந‌ல்லா க‌ழுவி மேல் தோலை சீவி சின்ன‌ சின்ன‌ துண்டா ந‌றுக்கிக்க‌னும்.

புதினா,கொத்த‌ம‌ல்லி,ப‌ச்சை மிள‌காய் எல்ல‌த்தையும் எலுமிச்சைசாறுல‌ அரைச்சி ப‌சை மாதிரி ஆக்கிக்க‌னும்.

வெங்காய‌ம்,ப‌ச்ச‌ரிசி,மாங்காய் கூட‌ வெள்ள‌ரிக்காய்,கேர‌ட்,முள்ள‌ங்கியையும் சேர்த்து ந‌ல்லா குலுக்கிக்க‌னும்.அதுல‌ புதினா ,கொத்த‌ம‌ல்லி,ப‌ச்ச‌மிள‌காய் ப‌சையை சேர்த்து காய்க‌றிக‌ளை ந‌ல்லா குலுக்கிக்க‌னும்,இதை ஃப்ரிட்ஜுக்குள்ள‌ வெச்சுக்க‌லாம்.

ப‌ரிமார‌க்கூடிய‌ ச‌ம‌ய‌த்துல‌ தேவையான‌ க‌ருப்பு உப்பையும்,மிள‌குத்தூளையும் தூவி கொடுத்தா செமையா இருக்கும்,மாங்காய் இல்லாம‌லும் இந்த‌ சால‌ட்ட‌ செய்ய‌லாம்.ச‌ம‌ய‌த்துல‌ ச‌ப்பாத்திக்கு,சாத‌த்துக்குக்கூட‌ தொட்டுக்க‌ இந்த‌ வெள்ள‌ரிக்காய் வெஜிட‌பிள் சால‌ட் உத‌வும்,,வீட்டுல‌ எல்லாருக்கும் செஞ்சு கொடுங்க‌..ச‌ரியா..

4.நாவ‌ல் ப‌ழ‌ ஜூஸ்



சின்ன‌ வ‌ய‌சுல‌ நானெல்லாம் ப‌ள்ளிக்கூட‌த்துல‌ ப‌டிக்கும் போது நாவ‌ல்ப‌ழ‌ சீஸ‌ன்ல‌ அந்த‌ ம‌ர‌த்துக்கு கீழேயே ப‌ச‌ங்க‌ளோட‌ எப்ப‌டா ம‌ர‌த்துல‌ இருந்து ப‌ழ‌ம் விழும்னு காத்திட்டே இருப்போம்.காத்த‌டிச்சிடுச்சுனா அவ்வ‌ள‌வு தான் அடேய‌ப்பா..என்னா அடிபுடி ச‌ண்டை,,இப்ப‌ இந்த‌ நாவ‌ல்ப‌ழ‌த்துல‌ தான் இப்ப‌ நாம‌ ஜூச் செய்ய‌ப்போறோம்.

தேவையான‌ பொருட்க‌ள்:

கொட்டை நீக்கின‌ நாவல்ப‌ழ‌ம் 50 கிராம்
குளிர்ச்சியான‌ த‌ண்ணீர் 1 ட‌ம்ள‌ர்
உப்பு 1 சிட்டிகை
ச‌ர்க்க‌ரை 1 ஸ்பூன்

செய்முறை:

நாவ‌ல் ப‌ழ‌ம்,த‌ண்ணீர்,உப்பு,ச‌ர்க்க‌ரையை எல்லாத்தையும் மிக்சியில‌ போட்டு ந‌ல்லா அரைச்சி ப‌ழ‌ர‌ச‌மாக்கி குடிக்க‌ வேண்டிய‌து தான்..அட‌டா என்னா ஒரு சுவௌப்பா..ட்ரை ப‌ண்ணி பாருங்க‌ப்பூ..

3.கொய்யா ஜூஸ்

கொய்யாப்ப‌ழ‌ம் யாருக்குத்தான் பிடிக்காது.ந‌ல்ல‌ நார் ச‌த்து இருக்கு,,சின்ன‌ ப‌ச‌ங்க‌ளுக்கு ரொம்ப‌ ந‌ல்ல‌து.வெள்ளை,சிவ‌ப்பு கொய்யா எல்லாம் இருக்கு..க‌ம‌க‌ம‌னு வேற‌ ம‌ண‌க்கும்.




தேவையான‌ பொருட்க‌ள்:

கொய்யாப்ப‌ழ‌ம் - 100 கிராம் (செங்காயா இருக்க‌னும்)
த‌ண்ணீர் - 2 ட‌ம்ள‌ர்
ச‌ர்க்க‌ரை - 1 ஸ்பூன்

செய்முறை:

கொய்யாப்ப‌ழ‌த்தோட‌ மேல் ச‌தையை ம‌ட்டும் வெட்டி எடுத்துட்டு விதையை எடுத்துட‌னும்.அப்புற‌மா துண்டு துண்டா வெட்டி மிக்ஸியில‌ போட்டு த‌ண்ணீர் விட்டு அரைச்சி அதோட‌ ச‌ர்க்க‌ரையை சேர்த்தா கொய்யா ஜூஸ் ரெடி...ஐஸ் க்யூப் போட‌ ம‌ற‌ந்துடாதீங்க‌.

2.நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காயில‌ விட்ட‌மின் "சி" இருக்கு..அதோட‌ உட‌ம்புக்கும் குளிர்ச்சி வேற‌..




தேவையான‌ பொருட்க‌ள்:

விதை நீக்கின‌ நெல்லிக்காய் - 3
த‌ண்ணீர் - 2 ட‌ம்ள‌ர்
உப்பு - 1 சிட்டிகை
வெல்ல‌ம் அல்ல‌து ச‌ர்க்க‌ரை - 1 ஸ்பூன்

செய்முறை:

நெல்லிக்காயை மிக்சியில‌ 2 ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் சேர்த்து அரைச்சி ந‌ல்லா வ‌டிக‌ட்டி ஒரு கிளாஸ்ல‌ ஊற்றி அதோட‌ தேவையான‌ அள‌வு உப்பு,வெல்ல‌ம் எல்லாம் ந‌ல்லா க‌ல‌ந்து ஐஸ் க்யூப் சேர்த்தா நெல்லிக்காய் ஜூஸ் ரெடி.

ப‌ப்பாளி ஜூஸ்

வ‌யிறு முட்ட‌ சாப்பிட‌ற‌த‌ விட்டுட்டு ஜூஸ் குடிக்கிற‌து உட‌ம்புக்கு ரொம்ப‌ ந‌ல்ல‌து...



தேவையான‌ பொருட்க‌ள்:

ப‌ப்பாளி ப‌ழ‌த்துண்டுக‌ள் - 100 கிராம்
எலுமிச்சை ப‌ழ‌ச்சாறு - 2 ஸ்பூன்
வெல்ல‌ம் - 1 ஸ்பூன்
உப்பு -கொஞ்ச‌ம்

செய்முறை:

தோல் சீவி விதை நீக்கின‌ ப‌ப்பாளித்துண்டை மிக்ஸியில‌ போட்டு ந‌ல்லா கூழாக்கி அதுல‌ ஒரு க‌ப் கூல் வாட்ட‌ர்,வெல்ல‌ம்,உப்பு,எலுமிச்சை சாறு க‌ல‌ந்து ந‌ல்லா ஒரு ஸ்பூனால‌ அடிச்சி ப‌ழ‌ச்சாறாக்க‌னும்.இந்த‌ ப‌ழ‌ச்சாறு ந‌ல்லா டேஸ்டா இருக்கும்.வேக‌ வெச்ச‌ காய்க‌றிக‌ளை சாப்பிட்ட‌வுட‌னே குடிக்க‌ ந‌ல்ல‌ பான‌ம் இந்த‌ ப‌ப்பாளி ப‌ழ‌ச்சாறு.

ஓட்ஸ் கிச்ச‌டி

இப்ப‌ நாம‌ ஓட்ஸ் கிச்ச‌டி ப‌ற்றி பார்க்க‌லாம்..ஏன்னா ஓட்ஸ் அதிக‌ ப‌சிக்காது ,,ஊளைச்ச‌தையை குறைக்கும்.



தேவையான‌ பொருட்க‌ள்:


ஓட்ஸ் ‍ 1 க‌ப்
வெங்காய‌ம் - 30 கிராம் (பொடியா ந‌றுக்கின‌து)
காரட் - 50 கிராம் (ரொம்ப‌ பொடியா ந‌றுக்கின‌து)
ப‌ச்சை ப‌ட்டாணி -20 கிராம்
த‌க்காளி - 30 கிராம் (பொடியா ந‌றுக்கின‌து)
ந‌ல்லெண்னெய் - 1 ஸ்பூன்
ப‌ச்சை மிள‌காய் ‍ 2 (ந‌றுக்கின‌து)
சீர‌க‌ம் - 2 கிராம்
முட்டைகோஸ் 20 கிராம் (பொடியா ந‌றுக்கின‌து)
குடைமிள‌காய் 20 கிராம் (பொடியா ந‌றுக்கின‌து)
உப்பு - தேவைக்கு
கொத்த‌ம‌ல்லி த‌ழை - கொஞ்ச‌ம்

செய்முறை:

வாண‌லியில் எண்ணெயை காய‌ வெச்சு சீர‌க‌த்தை போட்டு தாளிச்ச‌துக்க‌ப்புற‌மா ந‌றுக்கின‌ மிள‌காய்,கேர‌ட்,ப‌ட்டாணி,வெங்காய‌த்தை போட்டு லேசா வ‌த‌ங்க‌ வைத்து 2 க‌ப் த‌ண்ணீர் ஊத்தி அதுல‌ 2 க‌ப் த‌ண்ண்ணீர் விட்டு கொதிக்க‌ வைக்க‌னும்.கொதி வ‌ந்த‌ உட‌னே உப்பு சேர்த்து ந‌றுக்கின‌ குடை மிள‌காய்,முட்டைகோஸ் போட்டு ஓட்ஸையும் போட்டு ந‌ல்லா கிள‌ர‌னும்.

ந‌ல்லா குழைஞ்சி வர்ர‌ ப‌த‌த்துல‌ த‌க்காளிய‌ போட்டு அது கூட‌வே கொத்தம‌ல்லி த‌ழைய‌ போட்டு பிர‌ட்டி இற‌க்கி ப‌ரிமாற‌னும்..

1.ர‌வா உப்புமா

நிறைய‌ பேருடைய‌ க‌வ‌லை என்ன‌ன்னா உட‌ல் எடை தான்..அது ஆணா இருந்தாலும் ச‌ரி தான் அது பெண்ணா இருந்தாலும் ச‌ரி தான்..இதுக்கெல்லாம் ஒரே தீர்வு என்னான்னா ஒண்ணு த‌வ‌றாம‌ 45 நிமிட‌ வேக‌ ந‌டை ப‌யிற்சி, இன்னொன்னு ச‌ரியான‌ உண‌வை தேர்ந்தெடுக்க‌ற‌து. இப்ப‌ நாம‌ உட‌ல் எடைய‌ குறைக்க‌ உத‌வ‌ற‌ சாப்பாடு த‌யாரிப்புக‌ள‌ பார்க்க‌லாமா.






தேவையான‌ பொருட்க‌ள்:


ர‌வை - 1 க‌ப்
பொடியா ந‌றுக்கின‌ வெங்காய‌ம் - 30 கிராம்
ரொம்ப‌ பொடியா ந‌றுக்கின‌ கார‌ட - 50 கிராம்
ப‌ச்சை ப‌லட்டாணி -20 கிராம்
பொடியா ந‌றுக்கின‌ த‌க்காளி - 30 கிராம்
ந‌ல்லெண்னெய் - 1 ஸ்பூன்
ப‌ச்சை மிள‌காய் - 2
சீர‌க‌ம் - 2 கிராம்
உப்பு - தேவைக்கு
கொத்த‌ம‌ல்லி த‌ழை - கொஞ்ச‌ம்

செய்முறை:

வாண‌லியில் எண்ணெயை காய‌ வெச்சு சீர‌க‌த்தை போட்டு தாளிச்ச‌துக்க‌ப்புற‌மா ந‌றுக்கின‌ மிள‌காய்,வெங்காய‌த்தை போட்டு வ‌த‌ங்க‌ வைத்து 2 க‌ப் த‌ண்ணீர் ஊத்தி அதுல‌ கேர‌ட்,ப‌ட்டாணி போட்டு கொதிக்க‌ வைக்க‌னும்.

இப்ப‌ த‌னியா ச‌லிச்சு லேசா வ‌றுத்த ர‌வைய‌ கொதிச்சிட்டிருக்க‌ற‌ த‌ன்ணீருரோட‌ க‌ல‌ந்து உப்பை போட்டு கிள‌ரி விட‌னும். கிச்ச‌டி ந‌ல்லா குழைஞ்சி வர்ர‌ ப‌த‌த்துல‌ த‌க்காளிய‌ போட்டு அது கூட‌வே கொத்த ம‌ல்லி த‌ழைய‌ போட்டு பிர‌ட்டி இற‌க்கி ப‌ரிமாற‌னும்..இதுக்கு தொட்டுக்க‌ த‌னியா எதுவும் சேக்காம‌ இருக்க‌ர‌து ரொம்ப‌ ந‌ல்ல‌து...